பக்கம் எண் :

64சோழமண்டல சதகம்

தியாகராசப் பள்ளு

கருணா கரன்செய் திருப்பணியைக்
          கருதி நலமாய்க் கண்டுசெய்த
பொருளீ நாலத் தொன்றுடையான்
          பூமி யானைப் போல்ஆரோ
திருவா ரூரில் வன்மீகத்
          தியாக ராசப் பள்ளுதந்தும்
மருவார் பணிய அரங்கேற்றி
          வைத்தார் சோழ மண்டலமே
91

கருணாகரன் செய்த திருப்பணியை முன்னின்று முடித்தவர் நாலத் தொண்ணு என்னும் ஊரைச் சேர்ந்த மல்லைய பூபன் என்பவன். அவன் திருவாரூரில் தியாகராசப்பள்ளு என்னும் நூலை அரங்கேற்றி வைத்தார்.

முன்பு திருவாரூரில் ஆவணி மாதம் நடைபெற்ற பவித்ரோத்சவப் பத்துநாள் விழாவில் தியாகராசப் பள்ளு நடிக்கப்பட்டது. இப்பள்ளு நூலைப் பாடியவர் ஞானப்பிரகாச கோத்திரத்து ஞானப்பிரகாச பட்டாரகர் என்பவர். அவர் தருமை முதல்வர் குருஞானசம்பந்தரின் குரு கமலை ஞானப்பிரகாசரே ஆவார்.

மங்கை பாடக் கமலைச் சடிலர் மருவும் அரவம் ஆடவே
மார்பில் செங்கழு நீரும் பைந்தொடை மணிப்பொன் தோடும் ஆடவே
கங்கை ஆடத் திங்கள் ஆடக் கனக தண்டினில் ஆடுவார்
கமலை வாழும் அமரர் மேவும் கயலு லாவும் வயலுளே

என்பது தியாகராசப் பள்ளுப் பாடலில் ஒன்றாகும் (58).

கணம்புல்லர்

போற்றா மற்பெண் ணார்அழலில்
          புகுந்தாள் அதிலும் புதுமையிது
முற்றா எழுந்த கணம்புல்லால்
          மூடிப் பாத முடியளவாய்
பற்றா உடலை விளக்கேற்றிப்
          பரனுக்கு ஏற்பப் பதித்தபுரி
வற்றா நிலைமைக் கணம்புல்லன்
          வாழ்வாம் சோழ மண்டலமே
92
Try error :java.lang.NullPointerException