அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எம்கோன் திருமிகு சிறப்பில் பெருவகை அகலத்து எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர் அண்ணல் யானைச் செங்கோல் விண்ணன் செருமுனை செருக்குஅறத் தொலைச்சி ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே என்பது ஒரு பழம்பாடல் (யாப். விருத்தி 83). திரிகர்த்தராயன் அளிக்கும் படைமூ வேந்தரும்கொண் டாடும் விருந்தால் அதிசயமாய்த் திளைக்கும் திரிகர்த்த ராயன்எனச் செப்பும் வரிசைத் திறம்சேர்ந்தோன் விளைக்கும் அரிசி மாற்றியநீர் வெள்ளம் கிழங்கு விளையும்என வளைக்கும் பெருமைப் புதுவையர்கோன் வளம்சேர் சோழ மண்டலமே | 94 |
சடையப்ப வள்ளல் சேர சோழ பாண்டிய அரசர்கட்கு விருந்தளித்தார். விருந்தில் மகிழ்ந்த மூவேந்தர்கள் வள்ளலுக்குத் ‘திரிகர்த்தராயன்’ என்று சிறப்புப்பெயர் அளித்தனர். இல்லத்தில் அரிசி கழுவிய நீர் வெள்ளப் பெருக்கெடுத்து வயலில் விளைவிக்கும் புதுவைக்கு உடையவர் சடையப்ப வள்ளல். சிங்கணர் கொங்கணர் சேதியர் திரிகர்த்தம் என மெய்க்கீர்த்தி கூறும். யாமார் புகழ இயற்கம்ப நாடன் இராமனொடும் பாமாலை சூடும் குலமுடை யானைப் படிபுரக்கக் கோமாறன் இட்டபொற் சிங்கா தனம்பெற்ற கொற்றவனைத் தேமாலை அச்சம் தவிர்ப்பான்வெண் ணைத்திரி கர்த்தனையே தண்ணார் கமலச் சதுமுகத் தோனையும் தப்புவதோ பண்ணா மணித்தலைக் கட்செவி யானது பாரினுள்ளே கண்ணாக வாழும் வெண்ணைத் திரிகர்த்தன் கலைத்தமிழ்கேட்டு |