பக்கம் எண் :

சோழமண்டல சதகம்67

எண்ணா முடியசைத் தால்உலகு ஏழும் இறக்குமன்றே

என்பன தனிப்பாடல்கள்.

பாண்டிநாட்டில் சோழியர்

ஓதார் காரைக் காடர்குடி
          ஒன்று கொடுத்தே உயர்மாறன்
கொத்தார் கொடைவே ளாளர்குடி
          கொண்டே மதுரை குடியேற்றிப்
பத்தார் திசையில் இருங்கள்எனப்
          பாண்டி நாடன் பட்டமிட்டு
வைத்தார் வேளூர்க் கிழவனது
          மரபோர் சோழ மண்டலமே
95

பாண்டிய மன்னன் தன் நாட்டுக்கு வேளாளர் வேண்டும் என்பதற்காகச் சோழ நாட்டுக்கு வந்து காரைக்காடர் குடியைச் சேர்ந்த வேளூர் கிழவன் என்ற வேளாளர் தலைவனையும் பிறரையும் அழைத்துக் கொண்டு சென்று மதுரையிலும் பாண்டி நாட்டின் பல இடங்களிலும் குடியமர்த்தினான். அவர்கள் பாண்டிய நாட்டில் வாழ்ந்தாலும் சோழிய வேளாளர் என்றே அழைக்கப்படுகின்றனர்.

காங்கேயன் நாலாயிரக்கோவை

கோலா கமலன் னரில்அவன்போல்
          கொடுத்தே புகழும் கொண்டோர்ஆர்
மேலார் கவுடப் புலவன்எனும்
          விழுப்பேர் கூத்தன் முழுப்பேராய்
நாலா யிரக்கோ வையும்புனைய
          நவில்கென்று இசைத்து நாட்டுபுகழ்
மாலாம் எனும்காங் கயன்வாழ்வு
          வளம்சேர் சோழ மண்டலமே
96

காங்கேயன் எனும் வளள்ல் ஒட்டக்கூத்தரைப் படிக்கவைத்து கவுடப் புலவன் என்று புகழ்பெறுமாறு செய்தான். நன்றி மறவாத ஒட்டக்கூத்தர் அக் காங்கேயன்மேல் நாலாயிரக் கோவை என்னும் நூலைப் பாடினார்.

பதிநோக்கி அன்னையைத் தண்டனிட் டேன்எனும் பாங்கியரை
எதிர்நோக்கி நின்று தழுவுகின் றேன்எனும் என்றுபொன்னி