பக்கம் எண் :

சோழமண்டல சதகம்71

வரிசை பெரிதுடையார் கட்கலமும் தூயர்
புரிசை யொருசாரார் அம்பலமும் தண்ணீரும்
தன்னிலத்த அல்ல புரிசைக்குத்
தெற்கொற்றித் தோன்றும் திருநென் மலியேநம்
பொற்கொற்றி புக்கிருக்கும் ஊர்

என்பது பொய்கையாரின் ஆரிடச் செய்யுள் (யாப். விருத்தி 93).

நெற்பயிர் விளைகழனி நெம்மேலி வாழ்தச்சன்
கற்படு திண்டோளன் கங்கண கணகணவன்
விற்புரை விழிநுதலாள் மின்மினி மினுமினுவை
சொற்படி வேலைசெய்வான் துந்துமி துருதுருவை

என்பது கம்பர் வாக்கு.

கன்றாப்பூர் நடுதறி

தோளார் தொடையான் அரும்புடையான்
          தோன்றல் திருமால் தொண்டனுமாய்
வேளாண் மகளை மணம்புணர்ந்து
          விழைந்தான் அவளும் விடையூர்திக்கு
ஆளாய் அன்பின் நடுதறியை
          அருச்சித்து இலிங்க மாகவைத்து
மாளா நிலைமைக் கற்புடையாள்
          மரபோர் சோழ மண்டலமே
101

திருநாட்டியத்தான்குடியில் பரம வேளாளர் என்பாருக்கு ஒரு பெண் பிறந்தாள். அவளைக் கன்றாப்பூர் அரும்புடையான் மகன் ஆதிவராகனுக்குத் திருமணம் செய்வித்தனர். பரம வேளாளர் மகள் சைவ சமயம் சார்ந்தவள். அவளது கணவன் வைணவன்.

அப்பெண் நாள்தோறும் கணவனுக்குத் தெரியாமல் மாட்டுக் கொட்டிலில் உள்ள நடுதறியைச் சிவலிங்கமாகக் கொண்டு வணங்கி வந்தாள். மனைவியின் செயலை அறிந்த கணவன் அந் நடுதறியைக் கோடரியால் வெட்ட அந் நடுதறியில் சிவபெருமான் தோன்றினார். வியந்த கணவனும் சிவனடியாராகி வீடு பெற்றான். தம் தேவாரத்தில்

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

என்று அப்பர் பாடினார். சிவலிங்கத்தில் கோடாரிக் காயம் இன்றும் உள்ளது.