நூல் அரங்கேற்றம் சுத்த குலசோ ழியருமுடி சூட்டும் காணி யாளர்களும் கத்தர் எனவே வரவழைத்துக் கவிக்கும் கனக மழைபொழிந்தே சித்தர் எனும்பொன் வைத்தவர்சந் நிதியில் சதகம் அரங்கேற வைத்த அருணா சலராயன் வாழ்வாம் சோழ மண்டலமே | 103 |
சோழிய வேளாளர் குலத்தில் தோன்றியவரும், சோழ மன்னர்க்கு முடிசூட்டும் உரிமையுடையவரும் ஆகிய சித்தாமூர் நள்ளாறு வைத்தியலிங்கம் அவர்கள் மகனான அருணாசலம் என்பவர் ஆத்மநாத தேசிகரிடம் வேண்டிக்கொள்ள தேசிகர் சோழமண்டல சதகம் பாடினார். சோழமண்டல சதகம் சித்தாமூர் பொன்வைத்தநாதர் சந்நிதியில் அரங்கேறியது. வாழி அளகை ராசன் வாழிபொன்னி ஆறு வாழி முகில்வாழி புளகம் மிகுசோ ழியர்வாழி பொன்வைத் தவர்சந் நிதிவாழி தழையும் சதகம் வாழிகொழு மீதிவாழி சோணாட்டில் வளரும் குடிகள் மிகவாழி வாழி சோழ மண்டலமே | 104 |
தஞ்சை அரசன், பொன்னி ஆறு, மேகம், சோழியர், சித்தாமூர் பொன்வைத்த ஈசுவரன் சந்நிதி, சதகநூல், கொழுமுனை, சோழநாட்டுக் குடிகள் ஆகியவைகட்கு வாழ்த்துக் கூறப்படுகிறது. |