பக்கம் எண் :

87நகரத் தாறு மநுடத் தடைவே
யேனை யாறுங் கேட்டைபூ ரட்டாதி.
(7)
 

 

 
881பத்திய பகரத் தொருநான் கிரண்டா
றுத்திர மத்தஞ் சித்திரை யாகும்.
(8)
 

 

 
89மகரத் தாறு மூன்று மூன்று
மகமா யிலியம் பூர மாகும்.
(9)
 

 

 
90யாவே யுத்திரட் டாதி யேனை
யூயோ மூலமென் றுணர்ந்திசி னோரே.
(10)
 

 

 
91யூயோ விரண்டு மேனாண் மூலம்
யாவே யுத்திரட் டாதிநாள் பெறுமே.
(11)
 

 

 
92ஒருநான் குரோகணி வகர மவ்வகை
மற்றை நான்கு மகசிர மாகும்.
(12)
 

 

 
932மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தே
ழட்டம ராசி வைநா சியக்கால்
விட்டனர் பின்னர் மேவினர் கொளலே.
(13)
 

 

 
94இரண்டீ ரிரண்டா றெட்டொன் பானெனத்
திரண்ட நாளே செல்வம் புகுதரும்.
(14)
 

 

 
95நன்மை பொருள்பே றின்பந் தருமெனத்
தொன்னெறிப் புலவ ருரைத்தனர் துணிந்தே.
அவை, -மூவகை யொன்பதின் முதன்முத னாளாம்.
(15)

[பி-ம்.] 1 பற்றிய.

2 “சொல்லியநாள் இருபத்தேழையும் ஒன்பதொன்பதாக மூன்று கூறாக்கிப் பாட்டுடைத் தலைவனியற் பெயரின் முதலெழுத்தினாளைத் தொடங்கிக் கூறுகளை யெண்ண, ஒன்று மூன்று ஐந்து ஏழ்வரிற் பொருந்தா. அல்லாத நாட்களுட் பாட்டுடைத் தலைவன் பெயர் முதலெழுத்தினிராசி தொடங்கி எட்டாமிராசி நாட்களும் பொருந்தா. வைநாசியமாகிய எண்பத்தெட்டாங்கால் நின்ற நாளும் பொருந்தாது” என்பது வச்சணந்திமாலையுரை.