பக்கம் எண் :

96சிறந்தசீர்த் தலைவன் பிறந்தநா ளாயினும்
பெயர்நா ளாயினு மியலுற வுணர்ந்தபி
னொன்றற் கேனு மிரண்டற் கேனு
1 மூன்றிகழ் பொருத்த மொழிவது கடனே.
(16)
 

 

 
 

[பின்வரும் சூத்திரங்களும் தனியே எழுதப்பட்டுள்ளன. (ச-பி.)]

 
 

‘வகர வருக்கத் தொருநான்கும் ரோகணி
மற்றொரு நான்கு மகசிர மாகும்.’

(100)

‘ஆரியர் சிதைவு மழிந்த வழக்குஞ்
சீரிய மொழிமுதற் காமெனப் புணர்க்கும்
வம்பப் புலவரு மன்னுந ராதலின்
மொழிமுத லாவகை யெழுத் தெல்லாம்
பன்னீ ருயிரு மன்ன வடக்கி
யந்நாள் பெறுமென் றறைகுந ருளரே.’

(101)

‘இருப துடனே ழியன்ற நாளை
ஒருவகை யொன்பா னாக்கி யிவ்வகை
மூவகை யாய்ச்செய் தொன்றுமூன் றைந்தேழ்
அட்டம ராசி வைநா சியக்கால்
விட்டனர் பின்னர் மேவினர் கொளலே.’

(102)

 
 

எழுத்தியல் முற்றிற்று.

 
 

-----

 
 

சொல்லியல்.

 
97நவையறு சீர்க்கண மங்கலச் சொற்பெய
ரிவையொரு நாளுக் கியம்புதல் சொல்லியல்.
 
   
 

1.- சீர்க்கணம்.

 
98ஈரசைச் சீரே மூவசைச் சீரே
நாலசைச் சீரே யோரசைச் சீரெனச்
சீர்வகை நான்குந் தெரிந்தனர் புலவர்.
(1)

1 மூன்று இகழ் பொருத்தம் - (3, 5, 7 என்னும்) மூன்றினையும் விட்ட பொருத்தம்.