பக்கம் எண் :

99ஈரசை யகவன் மூவசை நான்கு
நேரிறில் வெள்ளை நிரையிறில் வஞ்சி
நாலசை பொதுமற் றோரசைச் சீரே.
(1)
 

 

 
100மூவசை 1யெண்சீர் கணமென மொழிந்தனர்
ஈரசை நாலசை யோரசை யொழித்தே.
(2)
 

 

 
101கணமே மூவசைக் கூட்ட மாகும்.                               கபிலர்.(3)
 

 

 
102முற்பாட் டெடுப்பின் முதல¦ ரசைச்சொல்
சொற்பான் மங்கலச் சொல்லொடு தோன்றி
நிற்பினுங் கொள்ளார் நெறியுணர்ந் தோரே.
(4)
 

 

 
103நன்மைசெய் கடவு ணாடி னவற்றிற்குத்
தொன்னெறி மரபி 2னின்மை யானே
நாலசைச் சீரு மேலோ ரொழித்தனர்.                 இந்திரகாளியார்.
(5)
 

 

 
104நீடிய மானன் றிங்க ணிலநீர்
சூரியன் வான மங்கி காற்றென
வியம்பினர் தெய்வ நலம்பெறு புலவர்.
(6)
 

 

 
1053 நேரசை மூன்றிய மான னதற்குச்
சீர்புனை நாளே பரணி வாழ்நாண்
மற்றது பயக்குமென் றுய்த்துரைத் தனரே.
(7)
 

 

 
106நிரைநேர் நேர்நீண் மதிய மதற்கு
வருநாண் மகசிர மலிபுக ழாகும்.
(8)
 

 

 
107நிரையசை மூன்று நிலக்கண மதற்குத்
தருநாள் கேட்டை திருமிகத் தருமே.
(9)
 

 

 
108நீர்க்கண நேர்நிரை நிரைநாள் சதயம்
பார்க்கதிர்ப் பெருக்கம் பார்க்கு மென்ப.
(10)

[பி-ம்.] 1 யொண்சீர். 2 னின்மை யான.

3 இபமானனைச் சுவர்க்கம் என்னும் பெயராற் கூறுவர் வெண்பாப் பாட்டியலார். இந்திரகணமென்பர் நவநீதப்பாட்டியலுரைகாரர். “இந்திர கணமே பெருக்கஞ் செய்யும், சந்திர கணமே வாழ்நா டருமே”-மாமூலம்: என்பது நவநீதப்பாட்டியலுரை மேற்கோள்.