பக்கம் எண் :

109கண்ணிய நேர்நிரை நேர்வரிற் கடுங்கதிர்
நண்ணிய நோய்தரு நாள்புனர் பூசம்.
(12)
 

 

 
110நிரைநிரை நேர்தாம் வரினது வானம்
பெருகிய கேடது 1தருநா ளோணம்.
(13)
 

 

 
111நெருப்பின் கணநிரை நேர்நிரை கார்த்திகை
விருப்புறு நாள திடுக்கண் செய்யும்.
(14)
 

 

 
112காட்டிய நேர்நேர் நிரைவரிற் காற்றது
நாட்டறை போக்குநாட் சோதி யாகும்.
(15)
 

 

 
113நிற்பன தீக்கண நான்கவை நீக்கி
நற்கண நான்கவை நாட்டினர் கொளலே.
(16)
 

 

 
114நீரே நிலனே வாே (check) நீண்மதி
சீரிய மானன் செந்தீத் தெறுகதிர்
காற்றெனக் கிளர்ந்த கூற்றன வென்ப.
(17)
 

 

 
115அவைதாம்,
நேர்முத லாகி நிரையிணை பின்வரி
னீர்க்கண மென்ப நெறியுணர்ந் தோரே.
(18)
 

 

 
116நிரைமூன் றியைந்தது நிலனெனத் தகுமே. (19)
 

 

 
117முந்துநிரை யிணைந்து நேரிறு மூவசை
யந்தர கணமென் 2றறிதல் வேண்டும்.
(20)
 

 

 
118முதனிரை யாகி யிணைநேர் வழிவரி
னதுமதிக் கணமென் 3றறிந்தனர் கொளலே.
(21)
 

 

 
1194நேரசை மூன்றிய மானன் கணமே. (22)
 

 

 
120நேர்நடு வாகி நிரையிரு பாலுஞ்
சேரு மாயிற் செந்தீக் கணமே.
(23)
 

 

 
121நிரைநடு வாகி நேரிரு பால்வரி
னலர்கதிர்க் கணமென் றறிந்தனர் கொளலே.
(24)

[பி-ம்.] 1 நாளோண மென்ப. 2 றறைதல். 3 றறைந்தனர். 4 ‘நேர்முச் சீரிய மானன் கணமே’ (30) [ச-பி.]