பக்கம் எண் :

 நிரையீற் றியற்சீர் முதற்க ணிற்பினும்
வரையார் மூவசை வாராக் காலே.
(31)
 

 

 
129ஈரசை முதலா நேரீ றொழித்து
நிரையீற்று மங்கலம் புணர்த்தனர் கொளலே.
(32)
 

 

 
130நிரைநிரை கொற்றவை நேர்நிரை சாத்தன்.  
 

 

(33)
131அவைதாம்,
மிகுதரு திருவும் புகழுஞ் செய்யும்.                    சேந்தம்பூதனார்.
(34)
 

 

 
132ஓரசைச் சீரு நாலசைச் சீரும்
ஈரசைச் சீரு ணேரிறு சீரும்
மங்கலம் புணரினு மங்குதல் செய்யும்.                 கோவூர்கிழார்.
(35)
   
 

[பின்வரும் சூத்திரங்களும் தனியே எழுதப்பட்டுள்ளன. (ச-பி.)

 
 

‘நிலனு நீரு நிலவிய மதியும்
இயமானனு நல்ல வகுக்குங் காலே’.

(34)

‘ஏனை நான்கு மூனம் பயக்கும்’

(35)

. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .

(37)

‘சந்திரன் றீயெல் லந்தர மதனொடு
பூமி தேவியெனப் புகலுந்தெ. . . .
நிரைநேர் நிரைப்பின் னேர்நிரை நிரைவரும்
ஒருநாற் சீரு மொத்தமுறை யுடைமையின்
மற்றக் கடவுட்கு வரன்முறை யாகப்
பெற்றிடற் குரிய சீரும் பெறுமே’.

(38)

‘எண்வகைச் சீரு மியலுமச் சீருள்
வருண னாளே சதயம் பெறுமே’.

(39)

‘இயமான னாளே பரணி யாகும்’.

(40)

‘சந்திர னாளே மகசிர மாகும்’.

(41)

‘தண்பூமி தேவிநாட் கேட்டையாகும்’

(42)

‘எஞ்சிய சீரீ ரிரண்ட னுள்ளும்
வஞ்சமின் மாருத நாளே சோதி’.

(44)