‘எரிநாள் கார்த்திகை யந்தர கணத்திற் குரிய நாள தோண மாகும்’. (45) ‘சூரிய னாளே புணர்பூசம்மே’. (46) ‘நீர்க்கண முதனேர் நேரீ றந்தரம் பார்க்கண முந்நிரை பான்மதி நிரைமுதல் இயம்பினர் வருமென நயம்பெறு முன்னோர்.’ (49) ‘நிரைநடு வாமெரி நேர்நடு வாங்கதிர் பின்னிரை காற்றுமுன் னிரையிய மானன் நயம்பெறு கணமென வியம்பினர் புலவர்’. (50) ‘நலனுந் தீமையு நாடுங் காலை நிலனே திருவா நீரே பெருக்கம் மதியஞ் சீர்த்தி யியமானன் வாழ்நாள் வாயுநா டகற்றல் வான்றீ விளிதல் நோயிடைக் குறுகல் சூரிய கணமே’. (52) ‘வானின் கணமே சூரிய கணமே வாயுக் கணமே தீயின் கணமே சூனிய மாமெனத் துணிந்தனர் கொளலே’. (53) ‘காவல னாளொடு கணத்தி னன்னாண் மேவப் புணர்த்தன் மெய்ந்நெறி வழக்கே.’ (54) ‘ஈரசை முதல வானோ ரேனும் நேர்நேர் நிரைநே ரொழிந்து நிரையிறு மங்கலம் புணர வந்தன கொளலே.’ (56) |