பக்கம் எண் :

134சொல்லெனப் படுமவை சொல்லுங் காலைத்
திருப்பொன் பூமி புனன்மணி கடல்யா
றெழுத்தமு தெழின்மழை பசுங்கதிர் செஞ்சுடர்
நாள்சொன் ஞெண்டு நாட்டிய பரிமலை
கருட னருந்ததி மற்றிவை யென்ப
நிலைபெறு மங்கல நெறிநிற் பனவே.                    பொய்கையார்.
(2)
 

 

 
135செப்பிய வுடம்பொடு சேரா துயிர்முத
னிற்பன மக்கட் காமென நேர்ந்திலர்
மற்றவை கடவுளர் முனிவர்க் காமே.
(3)
 

 

 
136உயிரொடு புணரா மென்மையு மிடையுஞ்
செயிரிற் றீமையுஞ் செப்பத் தகுமே.
(4)
 

 

 
137ஓதிய மெய்யொடு புணரா துயிரெழுத்
தாதி நிற்பி *னானந் தம்மே.
(5)
 

 

 
138உடம்பு பிரிவுயிர் சாத றானே.                           இந்திரகாளியார். (6)
 

 

 
1391நரகரும் விலங்கு மமுதொடு வரினவை
புகரில வென்ப புலமை யோரே.                                    பரணர்.
(7)
 

 

 
140மூன்றைந் தேழொன் பானெழுத் தான்ற
வொற்றுட னெண்ணிமுன் சொற்ற முறையிற்
பல்பொருள் படவரூஉஞ் சொல்லா லகற்றி
யொருபொருட் டாகி வருமொழி பற்றித்
திரித லொழியத் திருந்திய சொல்லினுட்
2டெரிவோர் வகையுளி மறுத்து நட்டது
மங்கலச் சொல்லென வகுத்தனர் புலவர்.
(8)
 

 

 
141முன்னிலை யெழுத்தின் வியநிலை நலனே
சமநிலை யாயின் முதல்வற் கூனம்.
(9)

* ஆனந்தம் - சாக்காடு.

[பி-ம்.] 1 இச்சூத்திரத்துக்குமுன், ‘எழுத்தின் கிழத்தி நாமக ளாதவிற், பெண்ணெழுத் தல்லது முன்வைத் துரையார்’ என்று ஒருசூத்திரம் காணப்படுகிறது. 2டிரவோர். [ச-பி.] வியம் - ஒற்றையெண். சமம் - இரட்டையெண்.