பக்கம் எண் :

142  சொல்லிய மரபின் மங்கலஞ் சிதைத்துப்
புல்லுதல் குற்றம் பொருட்டலை மகற்கே.
(10)
 

 

 
143  தொடுகழல் வேந்தன் றுன்னா தோரும்
வடுவறு பரிசில் வழங்கா தோருங்
கெடுதல் வேண்டிச் சிதைத்தலு முரித்தே.
(11)
   
 

[மங்கலச்சொல் என்ற தலைப்பின்கீழ்ப் பின்வரும் சூத்திரங்களும் தனியே எழுதப்பட்டுள்ளன. (ச. பி.)

 
   
 

‘திருவே பூவே திங்கள் ஞாயிறு
கடலே மலையே கார்மழை பசும்பொன்
மணியே மாநிலம் வருபுன லமிழ்தம்
தேர்பரி களிறு சீர்முத லென்றிவை
போல்வன பிறவும் புகழ்ந்தநற் சொல்லே’.

(61)

‘திருப்பொன் கடலே தேர்பரி களிறே
பொருப்பே மணிபூப் புகழிவை பிறவும்
வந்தன விதிக்கு மங்கலச் சொல்லே’

(63)

‘நிலைபெறு கணத்தின் முதனிலை யெழுத்தே
தலைவ னாளொடு தாஅ னிருவகைப்
பெயர்முத லெழுத்தொடு கொள்ளும் பெற்றித்
தான வகைய தாப்பால் கணங்கதி
யூன மின்றி யொற்றுமை பற்றிய
வுயிர்மெய் வல்லெழுத் தாக்கிச் செயிர்தீர்
வேற்றுமை யாகா விதியின் மாறி
நஞ்செனப் படாஅ வமிழ்தெனத் தோன்றி
யெஞ்சிய விலக்கண மெல்லா முடைத்தா
யேதந் தீர்ந்த வியல்பின வென்ப’.

(65)

‘உயிரொடு புணர்ந்த மென்மை யிடைமையுஞ்
செயிரின் றிவையுஞ் செப்பத் தகுமே’.

(66)

‘தொடுகழல் வேந்தன் றுன்னா னொருவன்
வேறு பரிசில் வீயா தொருபகல்
கெடுதல் வேண்டிற் கிளத்தலு முரித்தே’.

(71)

‘எடுத்த முதன்மொழி யீறுதிரிந் தொன்றலும்
வகுத்த வச்சீர் வகையுளி சேர்தலும்
பொதுப்பட மொழிதலும் பொருட்புல னின்மையுஞ்
சிறப்பொடு படாமையுஞ் சிறுபெயர் பிளத்தலு
மறத்துள் வழீஇய வானந் தம்மே’.

(72)

 
 

-------