| 3-பெயர்ப்பொருத்தம். | |
144 | எண்வகைப் பெயரு நண்ணுதல் செப்பிற் குலங்குடி கோத்திர நலம்பெறு குணமே மனமே யாணை மன்னிய சிறப்பே யியற்பெய ரென்றிவை தம்மு ளியன்ற சிறப்பியற் பெயரெனு மிருதிறத் திற்கு 1மயக்கற மொழிமுத லெடுக்குஞ் சொல்லுடன் பொருத்தங் கொள்வர் கருத்துணர்ந் தோரே. | (1) |
| | |
145 | பார்ப்பா ரரசர் வணிகர்வே ளாளரெனப் பாற்படு நாற்பெயர் குலப்பெய ராகும். | (2) |
| | |
146 | குடிப்பெய 2ராவன கூறுங் காலைச் சேரன் சோழன் பாண்டிய னென்றிவை போல்வன பிறவும் பொருத்தங் கொளலே. | (3) |
| | |
147 | கோத்திரப் பெயரே கூறுங் காலைத் தாதைகுடிப் பெயரைத் தக்கவற் றியற்றல். | (4) |
| | |
148 | குணப்பெய ரேனப் புலவோர் கொடுப்பத் தணப்பில வாகித் தழுவும் பெயரே. | (5) |
| | |
149 | மனப்பெய ராவன தனக்குத் தானே யெனக்கிது வேண்டுமென் றெய்தும் பெயரே. | (6) |
| | |
| [இஃ திராசாக்க ணாய னடியார் தோழன்.] | |
| | |
150 | ஆணைப் பெயரே வலியோ ரஞ்சப் பேணி யுலகம் பேசும் பெயரே. | (7) |
| | |
151 | சிறப்புப் பெயரே தெரியுங் காலைச் சிறப்புடை வேந்தன் கொடுக்கும் பெயரே. | (8) |
| | |
152 | சாதியி லுள்ளோர் தமக்குத் தாமே நீதிகொள் 3சிறப்பியற் பெயர்கொளற் குரியர். | (9) |
| | |
153 | முடியுடை வேந்தன்முற் குலத்தோர்க் கல்லது பட்டமும் பூவும் பூணு மாழியு நட்டமி னலமலி சிறப்புப் பெயருங் கொடாஅ னெனமொழிப குலமொழிப் புலவர். | (10) |