‘கோத்திரப் பெயரே கூறுங் காலைக் காப்பியன் கவுணியன் காசிப னென்றிவை போல்வன பிறவும் பூசுரர்க் காகும்’. (76) ‘அரசர் கோத்திரப் பெயரே கூறிற் குடிப்பெய ரதனை வைத்தவர்க் கியற்றல்.’ (77) ‘தந்தையர் பெயர்வழிப் பெயரன்பெய ரென்று சிந்தித் திடுவ தியற்பெய ராகும்’. (83) ‘தந்தைக்கு முந்திய தெய்வப் பெயரும் மிக்கோர் பெயரும் விதியிற் புனைவ தியற்பெய ரென்ப வியல்புணர்ந் தோரே’. (84) ‘எண்வகைப் பெயரி னிருமூன்று பெயரொழித் தியற்பெயர் சிறப்புப் பெயரிரண் டிற்கு மயக்கறு மொழிமுதற் பொருத்தங் கொளலே’. (85) ‘பாடுங் குரிசி லியற்பெயர்க்கு முன்வந்து கூறுங் குறிநிலை கொண்டு சிறப்பின் ஆகிய பால ராதி பெயர் . . . நீக்கி யியற்பெயர் கொண்டமுத வெழுத்து நின்ற நிலனே பால னாகத் தென்றமிழ்ப் புலவர் திண்ணிதிற் கொளலே’. (86) சொல்லியல் முற்றிற்று. ------ |