157 | ஒன்றே யாகியு மொன்றுபல வாகியும் பலவொன் றாகியும் பாற்படு மினமே. | (2) |
| | |
158 | அவற்றுள், ஒன்றா கியவின மெனப்பட் டனவுலா வாற்றுப் படைவகை மடன்முத லாயின. | (3) |
| | |
159 | 1ஒன்றுபல வாகிய வினமந் தாதி கோவை காப்பிய மாதியாக் கூறுவன. | (4) |
| | |
160 | பலவொன் றாகிய வினமெனப் பட்டன கலித்தொகை குறுந்தொகை 2நெடுந்தொகை 3முதலாயின. | (5) |
| | |
161 | பலவொன் றாகிய வினமெனப் பட்டன கலம்பக மும்மணிக் கோவைமுத லாயின. | (6) |
| | |
| 1.- பாப்பொருத்தம். (வெண்பா.) | |
|
162 | அந்தணர் சாதி யாகிய வெள்ளைக்குச் சந்திரன் றன்னொடு தகைமிகு வியாழன் கடவுளர் கார்த்திகை 4முதலேழ் நாளா மீனங் கடகந் தேளே யோரை சந்தனம் விரைபூ வந்தண் மல்லிகை வெண்மதி 5நிறனே வண்ண நிலனே முல்லை யென்னச் சொல்லினர் புலவர். | (1) |
| (ஆசிரியப்பா.) | |
163 | காவலர் சாதி யாகிய வகவற் காகிய கடவுளர் செங்கதிர் செவ்வாய் நாளே மகமுத னாளே ழாகுஞ் சிங்கந் தனுவே மேட மோரை செஞ்சந் தனம்விரை கழுநீர் பூவே செந்நிற நிறனே நன்னிலங் குறிஞ்சி. | (2) |