பக்கம் எண் :

164   நெடுநிலைக் கலியே வணிகர் சாதி
கடவுளர் சனிபுதன் கருதிய நாளே
யநுடமுத லாறே யோரை துலாங்குட
மிதுனஞ் சந்தனம் விரைபூச் சண்பகம்
பொன்னிற நிறனே நன்னில நெய்தல்.
(3)
 

(வஞ்சிப்பா.)

 
165   எஞ்சிய வேளாண் சாதி வஞ்சி
நாளே யவிட்ட முத1லேழ் நாளா
மிடபங் கன்னி மகர மோரை
சார்ந்த விரையே தண்ணறுங் கலவை
யேந்திய போதே யின்னறு நீல
நீல 2நிறனே நெடுநில மருதம்.
(4)
 

 

 
166   நால்வகைப் பாவிற்கு மேலோர் வகுத்த
வினங்களும் பெறுமென நினைந்தனர் கொளலே.
(5)
 

 

 
167   நால்வகைப் பாவு நால்வகைக் குலத்தின்
பால்வகைப் படுமே 3முதலன விரண்டின்
புணர்ச்சி மருட்பாப் பொருந்தா வருணம்.
(6)
 

 

 
168   நாளு மோரையு நலத்தகு நிலனும்
விரையுஞ் சாதியு நிறனுங் குணனு
4முரைபெறும் பாநரர்க் குடைய வென்ப.               கல்லாடனார்.
(7)
 

 

 
169   அந்தச் சாதிக் கந்தப் பாவே
5தந்தனர் புலவர் தவிர்ந்தன வரையார்.
(8)
 

 

 
170   வெள்ளையு மகவலும் விருத்தமுங் கலியும்
வஞ்சியு மெஞ்சா மங்கலம் பொருந்தும்.
(9)

[பி-ம்.] 1 லே ழாகு. 2 நிறமே நிலமே மருதம். 3 முதல. 4 முரை பெறு பாநான் குடைய; முரைபெறு நான்குமுடைய. 5 யிசைந்தன புலவர் தவிர்ந்தன வரையார்.