| நாழிகைக் கவியே நவமணி மாலை கைக்கிளை யரிபிறப் பட்டமங் கலமே யில்லற வெள்ளை யெழில்புனை தாரகை சொல்லிய தாண்டகந் துகளறு பதிகஞ் சீர்மெய்க் கீர்த்தி செருக்கள வழியே யாற்றுப் படைவகை கண்படை துயிலெடை விளக்கு நிலையே வெஞ்சினக் கடாநிலை யெண்ணிய யாண்டே கண்ணிய பறைநிலை 1யரும்பொரு ணிறுத்த வந்தா தித்தொகை புறநிலை வாயுறை செவியறி வுறூஉவே பாத மாதி பணைமுலை நயனங் குற்றமி லுழத்தி குறத்திப் பாட்டே யொருபா வொருபஃ திருபா விருபஃது கோவை கணக்கே தொடர்நிலை பாட்டே கடைநிலை கையறு 2நிலையெனக் கருதி யிடனறி புலவ ரியம்பின ரினமே. | (1) | | | | | 1-சாதகம். | | |
| | | 173 | தோற்றிய சாதகஞ் சாற்றுங் காலைப் பற்றிய கலியுகத் துற்ற யாண்டிற் றிருந்திய 3சகாத்தமு மாண்டும் பொருந்திய ஞாயிறும் பக்கமு மேய வாரமு மிராசியு மன்னுற மொழிதற் குரிய. | (2) | | | | | 2-பிள்ளைப்பாட்டு. | | | | | 174 | பிள்ளைப் பாட்டே தெள்ளிதிற் கிளப்பின் மூன்று முதலா மூவே ழளவு மான்ற திங்களி னறைகுவர் நிலையே. | (3) |
[பி-ம்.] 1 அறிஞர் தெரிந்த. 2 நிலையென வுணர்ந்தோர் - இயலும் பாவின மெனவிளம் பினரே. 3 சகாத்தத்தி னாண்டும் பொருந்திய-ஞாயிறும் பக்கமுஞ் செய்யுட்கு முரித்தே. |