175 | ஒன்றுமுத லையாண் டோதினும் வரையார். பொய்கையார். | (4) | | | | 176 | தோற்ற முதல்யாண் டீரெட் டளவு மாற்றல் சான்ற வாண்பாற் குரிய. | (5) | | | | 177 | காப்புமுத லாகிய யாப்புவகை யெல்லாம் பூப்பு நிகழ்வளவும் பெண்பாற் குரிய. இந்திரகாளியார். | (6) | | | | 178 | தொன்1னில வேந்தர் 2சுடர்முடி சூடிய பின்னர்ப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே, பரணர். | (7) | | | | 179 | காப்பொடு செங்கீரை தால்சப் பாணி யாப்புறு முத்தம் வருகவென் றன்முத லம்புலி சிற்றில் சிறுபறை சிறுதேர் நம்பிய 3மற்றவை 4சுற்றத் தளவென விளம்பினர் தெய்வ நலம்பெறு புலவர். | (8) | | | | 180 | தந்தை தாயே பாட்டன் பாட்டி முந்துற வுரைத்தன் முறைமை யென்ப. | (9) | | | | 181 | 5திருந்திய பெண்மக வாயின் விரும்பிய பின்னர் மூன்று மன்னுநீக் கென்றனர். | (10) | | | | 182 | சிற்றில் சிறுதேர் சிறுபறை யொழித்து மற்றவை மகளிர்க்கும் வைப்ப தாகும். | (11) | | | | 183 | சிற்றி லிழைத்தல் சிறுசோ றாக்கல் பொற்பமர் குழமகன் புனைமணி யூசல் யாண்டீ ராறதி லெழிற்காம னோன்பொடு வேண்டுத றானும் விளம்பினர் புலவர். | (12) |
[பி-ம்.] 1 னிலை. 2 பொன்முடி. 3 பத்திவை. 4 “சுற்றத் தளவுங் கவிக்கெல்லை யாய்க்கொண்டு சொல்லுவரே” என்றார் நவநீதப்பாட்டியலுடையாரும். [பி-ம்] 5 இச்சூத்திரத்துக்குமுன், ‘பெண்பா லாயிற் பின்னர் மூன்று மன்னுதல் நீக்கினர் வாய்மொழிப் புலவர்’. (14) என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.] |