பக்கம் எண் :

 

4.-உண்டி.

 
31அமுதென விடமென 1வருமிரு வகையு
முணவெனப் புலவ ருரைத்தன ருளரே.
(1)
   
32நஞ்சென வமுதென நவிலவும் படுமே. பொய்கையார். (2)
 

 

 
33உணவே யமுதமும் விடமு மாகும். அவிநயனார். (3)
 

 

 
34உயிர்க்குறி னான்கொடு கசதப நமவ
2மயக்கற வமுத வெழுத்தாகு மென்ப.
     3அவை:- அ, இ, உ, எ, க, ச, த, ப, ந, ம, வ.
(4)
 

 

 
35இவ்வுயிர் மெய்யோ டியைந்தன கொளலே. (5)
 

 

 
36ஆஓ விரண்டும் யரல மூன்றுந்
தாவிலிவ் விருவகைக் கூட்டத் தியைந்தவு
மளபு மாய்தமு மைவகைக் குறுக்கமு
4முளமலி புலவ ருரைத்தனர் நஞ்சென்
றவையொரு பெயர்மருங் கணைய நிற்பி
5னவையுறு துஞ்சலு நடுக்கமுஞ் செய்யும்.
(6)
 

 

 
37இருவகைக் கூட்டத் தியைந்தமேற் கூறிய
ஆகார வோகாரத் தொடுய ரலக்க
ளென்னு மொற்றொடு மியைந்தவுயி ரளபெடை.
(7)
 

 

 
38ஐவகைக் குறுக்கமு மறையுங் காலை
இகர உகர ஐகார ஔகார
மகர மென்னு மிவற்றின் குறுக்கம்.
(8)
 

 

 
39ஆ ஓ யரல முதலிய வளபெடை
யாய்தமைங் குறுக்க முளப்பட வெல்லாம்
விடமென மொழிப மெய்யுணர்ந் தோரே. பரணர்.
(9)

[பி-ம்.] 1 விருவகை யெழுத்து.

2 மயக்கறு மமுதெழுத்தாகு; எனப்பதினொன்று மமுதென மொழிப.

3 ‘அவைதாம், அஇ உஎ கசதந பமவ, வெனப்பதி னொன்று மமுதென மொழிப’.

4 முளமகிழ்.

5 னவையுறு துஞ்சலுங் கெடுதலுஞ்; னவையுறத் துஞ்சலுங் கெடுதலுஞ்.