40 | 1 நஞ்சா மொற்றொடு நடந்த வுயிர்களும் வஞ்சமில் புலவர் மறுத்தில ரென்ப. | (10) | | | | 41 | இருவகை யுண்டியென் றெடுத்தன வல்ல தாமே நிற்பினுந் தோமில வென்ப. | (11) | | | | 42 | நஞ்சு மமுதா மங்கலம் புகினே. | (12) | | | | 43 | அமுதெழுத் தென்ற வாதியுயிர் நான்கொடும் புணர்ந்த மெய்யை யுணர்ந்தமு தென்ப. | (13) | | | | 44 | மெய்யா மமுதின் மேவிய வுயிரும் பொய்தீர் புலவர் பொருந்தின வென்ப. | (14) | | | | | 2இவை இந்திரகாளியார். | |
140 முதல் 44 முடிய உள்ள சூத்திரங்கள் சங்கத்தில் உள்ளதோர் ஏட்டுச்சுவடியிற் காணப்படவில்லை; அவற்றுக்குப் பிரதியாகப் பின்வரும் சூத்திரங்கள் காணப்படுகின்றன. ‘குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே.’
‘வல்லெழுத் தாறோ டெழுவகை யிடத்தும் உகரம் அரையாம் யகரமொ டியையின் இகரமுங் குறுகு மென்மனார் புலவர்.’
‘ஐயும் ஔவும் அளவிற் குறுகும் வகார மிசையு மகாரங் குறுகும்.’
‘நெட்டுயிர் ஆஓ யரல வியைந்தவும் அளபெடை யாய்தக் குறுக்க முளப்பட விடமென மொழிப மெய்யுணர்ந் தோரே.’
‘நஞ்செனப் படுபவை நாடுங் காலை யரல ஆ ஓ வியைந்தவு மளபுங் குறுகிய வொற்றெழுத் திரண்டுங் கொளலே.’
‘நஞ்செனப் படுபவை பெயரொடு நிற்பிற் றுஞ்சல் கெடுதல் சொல்லினர் புலவர்.’
2“தெரிந்த யரலமேல்” என்னும் வெண்பாவுரையில் இவ்வைந்து சூத்திரங்களையு மெடுத்தோதி இவற்றை இந்திரகாளியமென்றார் வச்சணந்தி மாலையுரைகாரரும். |