பக்கம் எண் :

 

5.-பால்.

 
45ஆண்பால் பெண்பா லலியென நின்ற
மூன்றே பாலென மொழிந்தனர் புலவர்.
(1)
 

 

 
46இருவகை யைங்குறி லாண்பா லென்ப.(2)
 

 

 
47அகரமோ டைங்குறி லென்றா ராண்பால்.1(3)
 

 

 
48நெடிலே ழிருவகை பெண்பா லென்ப.(4)
 

 

 
49ஒற்று மாய்தமு மலியெனப் படுமே. (5)
 

 

 
50ஒற்றின் வருக்க மொன்பதிற் றிரட்டியும்
பெற்ற வாய்தமும் பேடெனப் படுமே.
(6)
 

 

 
51அவ்வவ் வெழுத்தே யப்பாற் குரிய
விரவினும் வரையா ரலியெழுத் தொழித்தே.
(7)
 

 

 
522அவ்விரு பாற்கு மலியெழுத் தாகா
தம்முண் மயங்கினுந் 3தாவின் றென்ப.
(8)
 

 

 
53உயிரீ ராறு மாணென மொழிப
வுயிர்மெய் யெல்லாம் பெண்ணென மொழிப
வுடம்பெழுத் தெல்லா நபுஞ்சக மாகும். பொய்கையார்.
(9)
 

 

 
 

6.-தானம்.

 
54குறிலைந் துடனெடில் கூட்டி நின்ற
ஐ ஔ விரண்டும் இ உ வடக்கிப்
பால குமார வரசு மூப்பு
மரணமென் றைவகைத் தானம் வகுத்தனர்.
(1)
 

 

 
55முன்பிற் செய்யுண் முதலெழுத் ததற்குப்
பொருத்தமும் விருத்தமும் பகையுங் கொளலே.
(2)
 

 

 
 அகத்தியர் பாட்டியல். 

1சங்கத்திலுள்ளதோர் ஏட்டுச்சுவடியிற் பின்வருஞ் சூத்திரங்களும் காணப்படுகின்றன. “ஆணெழுத் தென்ப ரகரமொடைங்குறில்” , “நெட்டெழுத் தெல்லாம் பெண்ணெனப் படுமே”.

2இது பரணர்பாட்டியலில் உள்ளதென்பது “குற்றெழுத்தாடூஉ” என்னும் நவநீதப்பாட்டியலுரையால் விளங்குகின்றது.

[பி-ம்.] 3தவறின்றதுவே.