பக்கம் எண் :

10திரு அவதாரம்

 

59.        இவ்விருண்ட ராவினிலே இவ்விதமாய்க் காத்திருக்க
             அவ்விருண்ட காடுதன்னில் தங்கியஅம் மேய்ப்பரேதாம்
             அவ்வமயமே யருளஅன் னவரைச்சூழ்ந் தேநின்ற
             அவ்விருட்டு நீங்கியொளி யங்குஜோதியாய்த் தோன்றிற்றே.

60.        அவ்வொளியோ மாமகத்வ அத்தனின்மா ஜோதியேதான்
             அவ்வொளியின் மத்தியிலே அந்தரத்திலே யோர்தூதன்
             அவ்விடையர் அஞ்சவேதான் மாவெழில்கொண் டேதோன்றி
             அவ்விடையர் தம்மைவிளித் "தஞ்சியேக லங்காதிரே.

61.        நற்செய்தியே கொ ண்டுவந்தேன் மானுடராம் யாவருக்கும்
             இச்செய்தியன் னோர்க்களிக்கும் எல்லையில்லா னந்தம்மே
             இச்செய்தியோ என்னவெனில் இன்றுகிறிஸ் தென்னுமோர்
             ரட்சாபெரு மானுதித்தார் ராஜனாந்தா வீதூர்தனில்.

62.        பாலனையே தர்சிக்க பார்க்குமடை யாளந்தான்
             பாலனைச்சுற் றித்துணியில் படுக்கவைத் தாரங்கே
             பாலனைப்ப டுத்தபசுத் தொட்டியிலே தர்சிப்பீரே
             பாலனையே தரிசித்தே பாக்கியரா வீர்" என்றான்.

வேறு

63.        உன்னததூ தாட்கணங்க ளக்கணமே யோர்வனாமத் தூதனெடுந் தோன்றியுமே
             உன்னதத்தி லோர் மகிமை யாகவுமே உன்னதர்ப ராபரனுக் கொப்பொழுதும்
             இந்நிலத்தி லுள்ளவராம் மானுட்ருக் கொல்லையிலாச் சாந்தியேயுண் டாகவுமே
             மண்ணுலகில் மானுடரின் மேற்பிரியம் மாறாதி ருக்கவெனப் பாடினரே.

வேறு

64.        பாடினஅத் தூதரேதாம் பாடியேமறைந் தேபோனார்
             ஆடுகளைக் காத்திருந்த அன்புளோராம் ஆயர்தாம்
             நாடிநமக் கேயுரைத்த நல்விசேஷங் காண்போமென
             ஆடுகளை யங்குவிட்டா வலோடே சென்றாரே.

65.        பெத்தலையென் னூரடைந்தே பிள்ளையுற்றகொட் டிற்சேர்ந்தார்
             பத்திதனி லேசிறந்த பத்னிமேரியம் மன்பார்த்தார்
             உத்தமனாஞ் ஜோசபென்னு மந்தபக்திமா னைக்கண்டார்
             பத்திரமாய் நித்திரைசெய் பாலனைத்தரி சித்தாரே.