பக்கம் எண் :

திரு அவதாரம்11

 

66.        கண்டிவற்றே மேய்ப்பரானோர் மாகருணை யாய்த்தமக்கு
             விண்டதோர்வி சேடமதை கண்டதாம்செய் தியாவும்மே
             அண்டையுளோர் யாவருமே தாமறிந்தாச் சர்யங்கொள
             கொண்டுமேதி ரிந்தனரே கூறினாரே யாவருக்கும்.

67.        ஆயருட செய்திகேட்டோர் ஆச்சரியங் கொண்டாரே
             ஆயரேதாங் கேட்டதேபோல் பார்த்தறிந்ததா லேமெய்யாய்
             ஆயனாகுங் கர்த்தரைத்தாம் அன்பொடுதுதித் தேசென்றார்
             தாயராகும் அம்மனோதம் உளம்வைத்துச் சிந்தித்தாரே.

8. எட்டாம் நாட்சுடன் லூக். 2 : 21

வேறு

68.        திட்டமாக விர்த்தசேத னம்முறைமை எம்மகனுஞ் செய்யவெனக் கற்பனையாம்
             திட்டமாயே ஆபிராமென் தந்தையர்க்கே தெய்வமிட்ட மைத்ததொரு கட்டளைபோல்
             எட்டெனுநா ளேவரவே யத்தினத்தில் இப்புனித அற்புதனாம் பாலனுமே
             திட்டமாய்வி தித்திருந்த கட்டளைபோல் சீரொடுமே விர்த்தசேத னம்மடைந்தார்.

69.        விர்த்தசேத னம்மதனா லாபிராமின் மேன்மையுறு சந்ததியா னானதுபோல்
             விர்த்தசேத னம்மடைந்தே யாபிராமின் மேன்மையுள் ளாசீர்வதச் சுதந்தரனாய்
             விர்த்தசேத னம்மடைந்தோர் பெற்றிராதோர் விஸ்வசத்தா வாவியினாற் க்ரூபையினால்
             விர்த்தசேத னம்மடைந்தே வாழ்வுயவே வேதவிதி தன்னைநிறை வேற்றினரே

70.        இட்டமாயே தந்தைதாய் மற்றவரும் ஏற்றதொரு நாமமிடும் பான்மை போல்
             திட்டமாயே சொப்பனத்தில் ரண்டுபேரும் தூதனிடங் கேட்டதொரு வாக்கதேபோல்
             சட்டமாக அவ்விடம்நி கழ்பவைகள் சர்வமும்ந டத்தியபின் பாலனுக்கே
             இட்டமாய்ந டந்தவைப வந்களுளே யேசுவெனு மின்பெயரே சூட்டினாரே!