பக்கம் எண் :

12திரு அவதாரம்

 

 9. தெய்வாலயத்திற் பிரதிஷ்டை, சிமியோன் - அன்னாள்.லூக். 2 : 22 - 29.

71.        ஏற்பட்டவே றொன்றுபிர மாணமேபோல் எழில்மகனுந் தாயருமா மிவ்விருவர்
             நாற்பதாநாட் சுத்திகரிப் பின்முறையே நலமொடுமே கைக்கொளவே வேண்டியதே
             ஏற்பட்டவே றொன்றுபிர மாணமேபோல் எழில்மகன்மு தற்பிறப்பே யானதினால்
             நாற்பதுநாட் செல்லவுமே யாலயத்தில் நலமொடும டைந்தலுமே வேண்டியதே

72.        கர்ப்பமேதி றந்துவரும் ஆணெதுவும் கர்த்தருக்கே நேர்ந்துவிட வேண்டியதே
             அற்பஜெந்தோ மேன்யையுள ஜென்மமெதோ ஐந்துவெள்ளிச் சேக்கலினால் மீட்படையும்
             எப்படியந் தஸ்துளரே யாயினுமெ இவ்விதியை நீங்குவதோ? கூடியதில்
             இப்படியே யேழையராந் தாய்மகனும் ஜொசபொடு மேகினரே சாலமுக்கே.

73.        எருசலேமே சேர்ந்ததொரு இக்குடும்பம் இதற்கெனவே தாங்கொணர்ந்த காசொடுமே
             பாசுத்தரின் சந்நிதியிற் பீடமதிற் பலிசெலுத்தக் கொண்டவிரு குஞ்சொடுமே
             பரிவொடுமே மாபரிசுத் தாலயமென் திருச்சமுகஞ் சேர்ந்தனரே பக்தியொடே
             பரிசுத்தரி னாலயத்தி லாவலொடே பரபரப்பாய்க் காத்திருந்தா னோர்முதியோன்.

74.        பத்தனாஞ்சிமி யோனெனும்பேர் கொண்டவனே பரிவொடுமே மாநகறிற் காத்திருந்தான்
             உத்தமனே நீதிபரன் தர்சியவள் உயரிஸரா வேலினுட ஆறுதற்காய்
             நித்தமுமே ஆவலொடே காத்திருந்தோன் முதியவனாம் விஸ்வாசியே ஓர்பெரியோன்
             அத்தனாஞ்சுத் தாவியானி றைந்தவனே அவருடைய வாக்கையுமே பெற்றவனே.

75.        கர்த்தரது மேசியாவைக் காண்முனமே காண்பதில்லைச் சாவேயென் வாக்கடைந்தோன்
             அத்தனுட ஏவுதலா லாலயத்தில் ஆவலொடு காணவுமே காத்திருந்தோன்
             அத்தனாமப் பாலகனை யேந்தினராய் ஆலயத்துள் ளவ்விருவர் சேர்ந்தவுடன்
             கர்த்தனையே தன்கரத்திலேந் தியுமேகனி வுடனேயே தோத்தரித்துப் பாடினனே.