பக்கம் எண் :

திரு அவதாரம்13

 

76.        ஆண்டவரே யும்மருளின் வாக்கதேபோல் அடியனையிப் போதுசம தானமொடே
             காண்டவனம் போன்றவிது காசினியைக் கடந்தெம்மை யேகவிடை யீய்கிறீரே
             மாண்டொழியும் நேர்மையுள மானுடரிம் மாநிலத்தி லுள்ளபுற ஜாதியர்க்கே
             மாண்டழியா ஜீவனளித் தேயிருளைத் நீக்குமொரு மாவொளியே யாவதற்கும்.

77.        நீண்டபொழு தேயடிமை யானவரை மீண்டுமிது நாடருளி யாங்கதனை
             ஆண்டசுய ஜாதியரா மிஸ்ரவேலின் க்ரீடமெனு மாமகிமை யாகவுமே
             ஆண்டவரே சர்வஜன ஜாதியர்முன் ஆயத்தமே செய்துளதாம் ரக்ஷ்ணியமே
             காண்டனவென் கண்களுமே காரணனே நின்கருணை யாற்றிருப்பதி யாயினனே.

வேறு

78.        விண்ணுனைக் கொள்ளு மோதான் விண்ணவர் தொழுங்கோ மானே
             கண்கொள லாகா தென்றே கண்முகம் மறைத்தா ராமே
             பண்டுளோ ராரு மேதான் பார்த்தரோ பரிசுத் துன்னை
             கண்டுளேன் கண்க ளாலென் கையினு மமைந்தாய் ஐய்யே!

79.        தோத்திரந் தேவா தேவா தோத்திரம் என்றும் ஐயா
             பாத்திர மாயே ழைக்கே பார்த்திபன் காட்சி யீந்தாய்
             நேத்திரா னந்தங் கொள்ள நிர்மலன் கிறிஸ்தைக் கண்டேன்
             தோத்திரந் தோத்திரம் ஐயா தோத்திரம் அல்லே லூயா.

80.        ஏங்கினே னினைத்தே னையா இவராலா றுதலே காண
             தாங்கினா யெளியே னென்னைத் தவம்புரி யடியன் யானே
             காண்கிறேன் காண்கின் றேனே கர்த்தரின் கிறிஸ்து தம்மை
             ஓங்கினே னடைவே னையா உன்னதப் பதவி தானே.

81.        தாவியே யற்பன் மேலே சாலவு மன்பே கூர்ந்தாய்
             பூவினின் வாழ்வின் மேலென் பொற்புறு ஆசை தன்னை
             மேவியே வைப்பே னோயான் மெய்ப்பரா வுன்னி டத்தென்
             ஆவியை யொப்பிப் பேனின் ஆர்சமா தானத் தோடே.