பக்கம் எண் :

14திரு அவதாரம்

 

82.        ஜெகமெலா மிலங்க வந்தோய் ஜெகத்தொளிச் சுடரே யானோய்
             ஜெகத்துள ஜனங்கட் கெல்லாம் ஜீவனுஞ் சுகமு மானோய்
             ஜெகத்தினி னிருளஞ் ஞானம் ஜென்மகன் மப்பா வந்தான்
             அகத்திரு ளகற்ற வந்தாய் அருட்சுடர் அல்லே லூயா.

83.        உன்திரு ஜாதி யாகும் உயர்குல இஸ்ரா வேலாம்
             அந்திரு ஜாதி யார்க்கே அழகிய க்ரீடம் ஆனாய்
             உன்திரு அன்பா லென்தன் உயர்விசு வாசத் தாலே
             எந்திரு ஜாதி யாகும் இஸ்ரவேல் மாட்சி யானாய்.

84.        பந்தமென் பவத்தா லுன்னை நீங்கியே பற்றா தோராம்
             உந்தனின் புதல்வ ரானோர் உய்வழி யுண்டா மாறே
             உந்தனின் உலகு தன்னில் உதித்ததாம் ரட்சண் யத்தை
             என்தனின் விழியாற் கண்டேன் எம்பரா என்னை யாள்வாய்

85.        சேவித் துக்கொண் டேனே திருமல ரடிகள் தன்னை
             பவியேன் பறந்தே யேக பகர்விடை தரமாட் டாயோ
              தாவிஎங்கோ செல்வேன் தரணிபா தாலமோ ஐய்யே
              மேவிநின்கழல் தன்னை நிதமுமே யகலேன் ஐய்யா.

வேறு

86.        இந்தவித வார்த்தைகளா லச்சிமியோன் இன்பமொடு பாலகனைப் போற்றவுமே
             அந்தமுறும் வார்த்தைகேட் டாச்சரியங் கொண்டனரே அன்புறுதாய் ஜோசுபுமே
            அந்தமுதி யோனருமை யோடுமினும் அவ்விருவர் தம்மையுமா சீர்வதித்தே
             பந்தமுறுங் கன்னியராந் தாயரையும் பார்த்திவித வார்த்தைகள் பகர்ந்தனனே.

87.        "உந்தனுட மைந்தனிதே பாலகனோ உற்றபலர் சிந்தனைவெ ளிப்படவே
             இந்தஜன மாமிஸரே லிற்பலபேர் வீழவுமெ ழும்பவுமே யாவதற்கு
             நிந்தைமிகப் பேசுமடை யாளமுமா யாகவுமே யேற்படுத்தப் பட்டனரே
             உந்தனது ஆத்துமம வஸ்தையுற ஊடுருவிச் செல்லுமொரு வாளு" மென்றான்.