பக்கம் எண் :

திரு அவதாரம்15

 

 

88.        இவணிவனே யிவ்விதமாய்த் தோத்தரித்தே தரிசனமா யின்னலுறும் வாக்குரைக்க
              அவணெழுந்தா னங்கிருந்தோ ரம்மையுமே அவனொடுமே கர்த்தரைப்பு கழ்ந்தனனே
              அவளுடைய நாமமன்னா ளென்பதுமே அவள்குடும்ப மாசேகென் கோத்திரமே
              அவளுடைய தந்தைபெயர் பானுவேலாம் அருந்தவத்தீர்க் கத்தரிசி யானவனே.

89.        அம்மாதோ கன்னிகைப்பி ராயமதில் அருங்கணவ னோடுசின்னாள் வாழ்ந்தவளே.
              இம்மகனோ டேழுவருடம் வதிந்தாளே எண்பதினான் காண்டுபதி யற்றவளே
              அம்மாதே யாலயமே சேர்ந்தினிதாய் ராப்பகலா யங்கிருந்தே நீங்காதே
              செம்மைமிகத் தொண்டவணே யாற்றினவள் என்றுமேஜெ் பித்துமேயா ராதித்தவள்.

90.        இம்மாதே யிவ்வமைய யிங்கெழுந்தே இன்பமுறக் கண்டனள்ந டந்தவையே
             இம்மானு வேலெனுமிப் பாலகனை யின்பமுறக் கண்டுகளி கூர்ந்தனளே
              எம்மானி னாவியறி னேவுதலால் ஏகபர னைத்துதித்தே பாடினளே
              இம்மாதே கூவினளே இஸ்ரவேலின் மீட்புவரக் காத்திருந்தோர்க் கந்நகரில்.

91.        ஏற்றினவர் போற்றினவ ரிங்கமர எழிலனையாங் கன்னியொடு ஜோசபுமே
              ஏற்றபலி யேசெலுத்திப் பீடமதில் எழில்மிகுமா கர்த்தருட சந்நிதியில்
              ஏற்றியேப டைத்தனர்நம் ஜேசுவையே யிவர்க்குரிய மீட்புமேசெ லுத்தினரே
              போற்றியேபு கழ்ந்துதுதி பாடியபின் எழுந்துபுறப் பட்டனர்தம் மூரினுக்கே

92.        பரிசுத்த ஜாதியெனும் யூதஜனம் பரிசுத்தர் கர்த்தரினா ராதனைக்காய்
              பரிசுத்தர் தெய்வமுட கட்டளையால் பரிசுத்த ஆலயமங் குற்றதினால்
              பரிசுத்த பட்டணமென் கீர்த்தியுள பரன்சமாதா னப்பதியென் பேருளதாய்
              பரிசுத்த சாலேமென் பட்டணமே பரிசுத்த நாடெதின்த லைநகராம்.

93.        உன்னதராந் தெய்வமுட அர்ச்சகனாம் உயர்மெலுகி சேதேக்கின் சாலம்நகர்
              பின்தினமெ பூசியரே வாழ்ந்ததொரு பிரபலிய கோட்டையுளே பூசுநகர்
              மன்னவன்தா வீதுமிகத் தீரமொடே வளைந்துபிடித் தாண்டஎரு சாலம்நகர்
              பின்னவன்சா லோமோனி யற்றியதோர் பிரபலிய ஆலயமுள் நன்னகரே,