94. முன்னாளில் நேபுகாத்நேச் சாரரசன் துணிவொடுது டைத்ததொரு தொல்நகரே நன்னாள்நெ கேமியாசெ ரூபபேலும மறுதரமெ ழுப்பியதாம் நவநகரே பின்னாளில் அந்தியோகென் ராஜனாலே பெருமிழிவும் நிந்தையும்நி றைந்தநகர் இந்நாளே ரோதெனுமே தோமியனால் எழிலழகு பெற்றதொரு ராஜநகர். 95. இந்தநகர் வீதியினி லோர்தினமே இதுமெய்னே ரோதினது காலத்தில் அந்நகர் யாவருமே ராஜனொடும் அதிர்ந்துளங்க லங்கியேத ளர்ச்சியுற அந்தரவான் சாஸ்திரமும் மற்றவையும் அறிந்தசிலர் "யூதரது ராஜனாக வந்தவர்ஜெ னித்ததல மெங்குளதோ வகையொடுவி ளம்பு" மெனக் கேட்டனரே. 96. "மண்டலத்தில் யூதருக்கே யோரரசன் வந்துதித்தா ரென்றறிந்து ளோம்நிசமே கண்டனம்யா மோருடுமே கீழ்த்திசையில் காடுமலை யாறுவனந் தான்கடந்த தொண்டராக வந்துளேம வர்பதம்ப ணிந்துதொரு தேற்றியுமே யேகுவோமே விண்டனமே யெம்விஷயம் யாவையுமே விண்டுரையும் மன்னனேஜெ னித்தாரே 97. இச்செய்தியோ அந்நகரி லேபரவ ஏந்தலுமங் குள்ளருங்க லங்கினரே இச்சந்தியி லெம்மெதிரி யாவனேன எண்ணியேரோ தேமனங்க லங்கினனே இச்சம்பவத் தாற்கொலையுண் பாரெவரென் றெண்ணியதிர்ந் தார்நகர மாந்தருமே இச்செய்தியே கேட்டவனா மிக்கொடியோன் வேதியரின் சங்கமதைக் கூட்டினனே. 98. வேதமறைப் பாரகராச் சாரியரே வேகமாயே கூடினரே சங்கமாக பாதகவே ரோதிவர்கள் கூடியபின் பண்பொடுவி னாவினனே சங்கத்தை வேதத்தை யாய்ந்தறிந்தே செப்புவீரே மேசியாவே வந்துதிப்ப தெங்கனவே வேதத்தை யாய்ந்தனராம் ஞானியரே வேதபுத்த கம்விரித்தே யாய்ந்தனரே 99. "யூதாவிற் பெத்தலையி லேபிறப்பார்" என்றுரைத்தார் யூகமொடே யுத்தரவே யூதாவி லுள்ளதொரு பெத்தலையே நீசிறிய தல்லயூத மேன்மகருள் தாதாவா யென்ஜனமா மிஸ்ரவேலை தண்ணளியோ டானவருனி லேயுதிப்பார் யூதாவி யோர்தீர்க்கன் சொன்னா"னென் றேயுரைத்தார் யூகமொடே சங்கத்தார். |