பக்கம் எண் :

திரு அவதாரம்17

 

100.       வேதமறைச் சாஸ்திரியர் நீங்கவுமே கீழ்த்திசையி னின்றுவந்த ஞானியரைத்
              பாதகமே ரோதழைத்தான் பண்பொடுமே அந்தரங்க மாயவரைத் தன்மனைக்கே
              சூதொடுமே மர்மமதைச் சொல்லியுமே சொல்லியதா மம்முடுவின் காலமதை
              தீதிலரா மிப்பெரியோர் தம்மிடமே திட்டமாய்வி சாரணைசெய் தேயறிந்தான்.

101.       "பெத்தலையே யேகுவீரே சீக்கிரமாய்ப் பிள்ளையை விசாரியுமே திட்டமாயே
              அத்தனாமப் பாலகனை நீர்தரிசித் தாத்திரமா யேதிரும்பி வாருமிங்கே
              சித்தனாக யான்படர்ந்தே யச்சிறிய பாலகனைக் கண்டுபணிந் தேற்றுதற்கே
              உத்தமமா யென்னிடமே செப்புவீரென் றூக்கமொடு சொல்லியேய னுப்பினானே.

வேறு

102.       வானசாஸ்த்ர ஞானியர்ம னங்குளிர்ந்தா னந்தித்தார்
              வானதெய்வத் தைத்துதித்தே மன்னனுக்கா சீர்கூறி
              வானமேதாம் நோக்கியேவ ளம்நிறைந கர்நீங்கி
              கானகத்தி னூடவர்க ளிப்படைந்தே சென்றாரே.

103.       ஆனந்தத் தோடுபோனார் அந்தமார்க்கம் போம்போதே
              ஆனந்தத் தோடுகண்டார் முன்னவர்காண் நட்சத்ரம்
              வானமதிற் றோன்றிவழி காட்டியவர் முன்செல்ல
              ஆனந்தத் தோடுசேர்ந்தார் அம்பதியே பெத்லேகேம்.

104.       அந்தவானட் சத்திரந்தான் அன்னவரவ் வூர்சேர
              அந்தவீட்டின் நேர்மேலாய் வந்தமரக் கண்டாரே
              வந்தஅந்த ஞானியர்தம் வாகனங்கள் விட்டங்கே
              அந்தவீட்டி னுட்புகுந்தார் அம்மனம்பா லன்கண்டார்.

105.       கண்டுகொண்டா ரேயரிதாங் கற்பகமே கண்ணார
              மண்டியிட்டார் மண்ணதின்மேல் மார்புமேப டிந்தேதாம்
              தெண்டனிட்டார் சாஷ்டாங்கத் தெய்வசேவை செய்தாரே
              உண்டோகளிப் புப்பக்திக் கோரளவே யன்னோர்க்கே.