பக்கம் எண் :

18திரு அவதாரம்

 

106.       அத்தனுக்கே தாங்கொணாந்த அம்பொருள்ப டைத்தாரே
              பெத்தரிக்க ராயருக்கே பேர்பொன்னே படைத்தாரே
              சுத்தவேதாச் சாரியர்க்கே தூபவர்க்கம் வைத்தாரே
              அத்தனான தர்சியார்க்கே அங்குவைத்தார் வெண்போளம்.

107.       தேடிவந்தே கண்டுகொண்டோம் திவ்வியமாம் தீம்பண்டம்
              நாடிவந்தே யாம்ருசித்தோம் வானமிர்தம் நன்றாயே
              கேடடைந்தோ ரைத்தூக்குங் கெட்டியமிழ் தங்கண்டோம்
              ஆடினாரே பாடினாரே ஆனந்தங் கொண்டாரே.

108.       அந்தவண்ண மேகளித்தே ஆங்குராவி லேதங்க
              அந்தரங்க தெய்வமோஅ வர்கனாவி லேதோன்றி
              "வந்தபாதை யேகவேண்டாம் வேறுமார்க்கம்" மென்றார்
              அந்தவாக்கைக் கேட்டவரே அவ்விதமே சென்றாரே.

எகிப்து செல்லல், ஏரோதுவின் பாதகம். மத். 2 : 13 - 18

109.       "அவ்விடம்நின் றேகஅன்னோர் அன்றுதூதன் யோசேப்பே
              இவ்விடம்நீங் காவிடிலெ ழில்சிறுவன் சாவானே
              அவ்விதம்ந டத்துவானே அக்குரூரன் ஏரோதே
              செவ்விதாயெ கிப்துசெல்வாய் செப்புநாள்மட் டும்"என்றான்.

110.       துன்பதுக்க முற்றவர்துர்ப் பாக்கியரா மக்கள்தம்
              துன்பதுக்கம் நீக்கியேநற் றூயவின்ப மீய்தற்காய்
              துன்பதுக்க முற்றவராய்த் துர்ருலகிற் கேவந்தோர்
              இன்பயேசு வுக்கிப்போ தோன்றினதே மாதுன்பம்.

111.        பஞ்சமேதப் பப்போனார் பண்டுதந்தை யாப்ராமே
              தஞ்சமென்றே போனாரே தந்தையாக்கோப் மற்றோர்தாம்
              அஞ்சியோடித் தப்பினார நேகரேமுன் னீஜிப்தே
              தஞ்சமென்றே சேர்ந்தனரே தற்பரனு மத்தேயம்.

112.       எச்சரிப்பாற் ஜோசபுந்தான் இங்கிருந்தெ ழுந்தானே
              அச்சமோடுபிள் ளைதாயே அங்குகொண்டு போனானே
              பச்சமாயம் மூவருந்தாம் சேர்ந்தனர்பன் னாட்சென்றே
              அச்சமின்றி யந்தநாட்டில் ஆண்டிரண்டே வாழ்ந்தாரே.