113. காத்திருந்தா னேகொடியோன் ஞானியர்க்காய் நீள்காலம் பார்த்திருந்து மேபலநாள் பார்த்துவஞ்சித் தாரென்றே ஆத்திரங்கொண் டேசினந்த னுப்பினான்தன் னாட்கள்தாம் சாத்திரமாய்க் கொன்றழித்தான் சர்வபாலர் ஈராண்டோர். 114. எவருடவே ளைவராமுன் எவரினந்தம் வாராமுன் எவர்களுக்கேற் பட்டதொரு ஏதுமூழ்யந் தீராமுன் எவரவர்கே டேபுரிந்தும் எவர்கொலவே பார்த்தாலும் எவர்களெண்ணி னாலுமாகா இவருடஅந் தம்வாரா. 115. திருப்பரன்மைந் தன்கெடவே தீயசூழ்ச்சி செய்தாலும் குரூரமாயே பாலகரைக் கொல்லவீரர் சென்றாலும் குருவுடநாள் வந்ததில்லை கொண்டவூழ்யந் தீர்ந்ததிலை திருப்பரனே பாலனையே காத்தனர்தீ யோன்கைக்கே. 116. ஞாலமேது யர்கொளந டந்தவிந்தத் தோஷத்தால் பாலரேயி ழந்தபெற்றோர் பக்கபந்தும் அன்பர்தாம் ஓலமிட்டார் வானைநோக்கி யுள்ளமேநொந் தேநைந்தார் ஓலமெட்டி னதேவானம் உலகாரும் பழித்தாரே. 117. "பாருமேகண் ணீர்புலம்பல் பார்துயரங் கொண்டாடல் ஊர்ராமாக் கூக்குரல்தான் ஓங்கியெங்கு மேகேட்டே ஆறுதலற் றாள்ராகேல் மக்களுக்காய்" என்றேதான் கூறினானெ ரேமியாவே குன்றாதே முற்றிற்றே. 118. எத்தனைநாள் வாழ்ந்தாலும் ஏகுநாளே நில்லாதே எத்தனையு யிரோகொன்றோன் ஏரோதென் தீயோனே பத்தமின்றி மக்களையும் பாசமாம்பெண் டீர்கொன்றோன் அத்தனைக்கொல் லத்துணிந்தோன் மாண்டனனந் நாட்சேர. 12. எகிப்தினின்று திரும்பல். மத். 2 : 19 - 23. 119. சாலமாகி மாளவேக னாவிலோர்தூ தன்தோன்றி சீலமாயே ஜோசபுக்கே கூறியசே மச்செய்தி "பாலகனைக் கொல்வதற்கே பார்த்ததீயோர் யாபேரும் காலமேசென் றேயொழிந்ார் காலமேபோக் காதேநீ, |