120. "பாலனையுந் தாயையுமே கூட்டியேசெல் வாய்பண்பாய் சீலமோடே யிஸ்ரவேலாஞ் சீர்நாடே சே"ரென்றான் காலைதோன்ற ஜோசபேக னாவையுரைத் தான்தாய்க்கே பாலனையுந் தாயையுமே கூட்டியேசேர்ந் தான்பண்பாய். 121. தாசனான இஸ்ரவேல்த யைபெற்றனன் பால்யத்தில் பாசமாக வேண்டமகன் சென்றனனப் ரிந்தீஜிப்த் வாசஞ்செய்தே மாண்டபின்ன டிமையானார் மக்கள்தாம் நேசமாய்மீட் டேயவரை நித்தியர்சேர்த் தார்கானான். 122. நேசமைந்த னிஸ்ரவேலை நீசஈஜீப்த் கைநின்றே பாசமாயே மீட்டுமேபண் பாயிவண்சேர்த் தாரென்றே ஓசயாத்த ரீசியாலு ரைத்தவண்ண மிப்போதும் நேசமைந்தன் தம்மையீஜிப்த் நின்றழைத்தே வந்தாரே. 123. காலனேநேர் ஏரோதே காலமாகி மாண்டான்பின் காலனேரற் கேபாயு காற்பங்காம் யூதாவில் சீலமேற்ற யாண்டதாலே சீலனங்கே செல்லாதே சாலஅஞ்சிக் கலிலேயா சார்ந்தநாச ரேத்சேர்ந்தான். 13. பாலப்ராயம் (1) நாசரேத் வாசம்மத். 2 : 23; லூக். 2 : 39, 40. வேறு 124. கிளையெனும் பொருளுள நசரதிலே கிளையெனும் பெயருளோர் வசித்தனரே இளமையில் வளர்ந்தனர் இயேசுபரன் இரட்சையென் பொருளுள நசரதிலே பழையவோர் பதியதாம் நசரதிலே பழகினர் பயின்றனர் நசரயனே தளைத்தவர் வளர்ந்தன ரதுதலமே தளர்விலா திருபது வருடமேழும். 125. பிள்ளையே வளரவே தனதாவியில் பெலனடைந் துயர்ந்தது விளங்கினதே தள்ளையுந் தகப்பனும் மகிழ்கொளவே தயவுசாந் தமுமிகப் பெருகியதே வெள்ளையாம் பரிசுசி ஜொலிக்கவுமே விளங்கிய தறிந்தன ரனைவருமே பிள்ளையே வளரவே திருஆவியிற் பெருகிய துயர்திருக் கிருபையினில். |