பக்கம் எண் :

திரு அவதாரம்21

 

126.       பாலியங் கடந்தே படிப்பதற்கே பர்வமும் வருமது பொழுதினிலே
              ஆலயச் சிறுகலா சாலையினிற் சேர்ந்தவர் பயின்றார் கல்வியுமே
              சாலவே மறைப்பிர மாணமதுஞ் சங்கிதந் தரிசன மும்படித்தே
              மேலதா முயர்திரு ஞானமதில் மேன்மையாய் வளர்ந்தனர் மனுமகனே.

127.       ஆலய மதில்நிகழ் சடங்குகளில் ஜெபமா ராதனை மிகஒழுங்கே
              சாலவே தமதுட அகமதிலே தமதனை தந்தையர்க் கமைந்திருப்பார்
              சீலமிக் கலங்கவே யெவர்களுக்குஞ் செயுமுப சாரமோ மிகச்சிறப்பே
              ஞாலமே மிதிலுள ரனைவரது நலமிகு மன்பினுக் குரியவரே.

128.       மார்க்கநி யமமனு சாரங்கள் மாறா தனுசரிப் பார்நலமாய்
              பார்க்குமெ வர்க்குநன் மாதிரியாய்ப் பண்பொடு நடந்துமே வந்தனரே
              மார்க்கம தன்பதி எருசலேமில் நடைபெறும் பண்டிகை யாவினுக்கும்
              சேர்ந்துசெல் வரேதாய் தந்தையொடே பின்திரும் புவர்விழாத் தீரவுமே.

(2) எருசலேம் பஸ்கா.லூக் 2 : 41 - 52.

129.       பன்னிரு வயதினிற் பஷாவரவே பண்டிகைத் கேகினர் பரிவொடுமே
              தன்னுட அனைபிதா இருவரோடே தாண்டியே சேர்ந்தனர் திருநகரே
              மன்னிய பெருந்திரள் ஜனங்களெலாம் பண்டிகை வணக்கமும் முறைமைகளும்
              நன்னய மாய்முடிந் தேதிரும்ப நாட்டமா யிருவருந் திரும்புகையில்.

130.       பையனா மிவர்தரித் திருந்தனரே பரிவொடு மாலய மண்டபத்தில்
              ஐயமே யிலதராய்ப் பெரியவரின் அவையில மர்ந்திருந் தார்நடுவில்
              பையன் கட்கே மறையினியிலே பரிட்சைசெய் சாஸ்த்ரிய ரானவர்கள்
              பையனா மிவர்வினா விடைகளையும் இவர்ஞா னமுங்கண் டதிசயித்தார்.

131.       அறிந்தில ரிருவரு மிதுவிஷயம் அன்னவர் சென்றொரு தினப்பயணம்
              தெரிந்தவ ருறவின ரயலரொடே சேர்ந்திருப் பாரென நினைந்தவராய்
              அறிந்தன ரவரொடு மிலையெனவே தேடின ரவரையே திரிதினங்கள்
              திரிந்தனர் திரிதினங் கவலையொடே சேர்ந்தனர் திருநகர் விசனமொடே.

132.       தேடியே திரிதினந் திருமகனைத் திகிலொடு புகுந்தனர் திருச்சநிதி
              கூடியங் கிருந்தவர் பெரியவராம் குழுநடு விருப்பதை யறிந்தனரே
              நாடியே பெரியவ ருரைப்பதையே நலமொடு செவிகொடுத் தறிவடைய
              தேடியே யவரிடம் வினவவுமே திருவுரை யறியவும் முயன்றதையே!