52. ஆவிவஸ்து வானவனே அற்புதாவ ரூபியானோய் சாவிலாதோர் தற்பரனே நித்தியச தானந்தாவே பாவிகளாந் தீயவர்க்காய் சாபமுற்றே பாழானோர் சாவினையே யுத்தரிக்கசா வுளாந்தேகங் கொண்டாயோ. 53. மண்ணுலகோர் மேலுளதோர் மாமகத்வஅன் பாலோநீ மண்ணுலகில் நீஜெனிக்க நல்லதோர்வீ டற்றாயோ மண்ணுலகி லுள்ளவர்தாம் மாமகத்வ வீடுசேர மண்ணுலகில் நீஜெனிக்கமா டடையுங்கொட் டிற்றானோ. 54. மாமகத்வமா னவனேமா சிறுமையுற் றாயோநீ மாமாகத்வரா ஜனேநீமா வெளிமையே யுற்றாயோ ஆம்!மகத்வகர்த் தனேநீதாழ்ந் தடிமைரூ பங்கொண்டாய் மாமாகத்வஆ சனனேமண் ணிதிலமர்ந் தாய்ஐயே! 55. என்னோஇவ் வற்புதம்பார் ஈசனிங்கே வந்தார்புவில் என்னோஇவ் வற்புதம்பார் எம்முருவங் கொண்டாரன்றோ என்னோஇவ் வற்புதம்பார் இந்நிலைமை யேயானாரே என்னோஇவ் வற்புதத்தை எப்படிமறப் பாய்பாவி. 7. ஆயர்க்குக் காட்சி. லூக். 2 : 8 -20. 56. மேசையா பிறப்பரென்றே மேன்மகரே காத்திருந்தார் மேசையா தாம்வந்த போதோமேன் மகறோரறிந் தாரில்லை மேசையா வோதாழ்மை யாயேமே தினியில்வந் தாரன்றோ ஆசைமே சையாவை நீக்கியற்றே அருளேகெட் டேபோனார். 57. தாழ்ந்தசிந்தை யுள்ளவராம் சாந்தமுள்ளமேய்ப் பர்தாமே. ஆழ்ந்தஅன்பே கொண்டவராம் ஆடுகள்மேல் கண்ணுள்ளோர் தாழ்மையுள் ளரூபமாயே தாரணியில் வந்தவரே தாழ்மையுள் ளமேய்ப்பருக்கே தர்சனமே முன்னீந்தார். 58. அப்பதியி லுள்ளமாந்தர் ராவிலேயயர்ந் தேதூங்க அப்பதியி னோரமாயே அங்குளவயல் கள்தன்னில் அப்பதியின் மேய்ப்பரானோர் ஆட்டுமந்தை யொடுதாமும் தப்பியேதும் போய்விடாதே தங்கியங்கிருந் தார்காத்தே. |