பக்கம் எண் :

136

 

445.       எனதுமா மிசமே விசுவசி யெவற்கும் என்றுமெய்ப் போசனம் நிசமே
              எனதுதி ரமுமே விசுவசி யவனுக் கென்றுமெய்ப் பானமே நிசமே
              எனதுமா மிசமென் னுதிரமே யருந்தும் யாவனு மென்னிலே நிலைப்பான்
              மனதுவந் தவனில் நிலைத்துமே யிருப்பேன் நானவ னொடுமெப் பொழுதும்.

446.       சீவனூற் றவராம் சீவனுள் ளவரே பிதாவெனை யிங்கனுப் பியதும்
              சீவனே யுளராய் யானிருப் பதுவும் பிதாவுட சித்தமா னதேபோல்
              சீவனுள் ளவனே என்சித் தமதால் எனைப்புசிக் கின்றவ னெவனும்
              சீவனே யளிக்கும் சீவஅப் பமிதோ பரத்திருந் திறங்குமப் பமேதான்.

447.       அத்தினத் தினிலே யும்பிதிர்க் களுமே யுண்டமன் னாநிகர்த் ததிலை
              அத்தினத் தினிலே யுண்டவ ரதிலே யனைவரு மதேகால் மரித்தார்
              இத்தின மிதுவா மப்பமே புசிப்போன் என்றுமே சீவனோ டிருப்பான்
              சித்தமே யுவந்தே செப்பினா ரிவற்றை சீர்கபர் நகூமா லயத்தில்

448.       இவைகளைக் கேட்ட சீடரிற் பலபேர் கடினமா முபதே சமிவை
              இவைகளை யுணர்ந்தே யேற்பவ ரெவரோ செவிகொள் வோரெவர் என்றார்
              அவரதைக் குறித்தே முறுமுறுக் கிறதை யருட்குரு தமக்குள றிந்தே
              அவர்களை விளித்தே யதனரும் பொருளை யருளொடு விளங்க வைத்தரே.

449.       இடறலோ வுமக்கே போதக மிதுவோ சொல்கிறேன் மனுமக னிருந்த
              இடத்தினுக் கெழும்பக் காணிலோ அவரை யெப்படி யுமக்கதே யிருக்கும்
              திடமிலா மாம்சம் எதற்குமே யுதவா ஆவியோ உயிர்பெறச் செயுமே
              திடமிதே யுமக்கே செப்புமிவ் வசனம் ஆவியு முயிருமா யுளதே.

450.       இப்படி யிருந்தும் உங்களிற் சிலபேர் விசுவச மிலரா யினரே
              இப்படி யுரைத்தார் சீடரு களுமே யெவர்விசு வசமிலா ரெனவும்
              தற்பரன் தமையே சற்குரு கிறித்தைத் துணிந்துகாட் டியேகொடுப் பவளும்
              தப்பிழைப் பவனை யாதியி லிருந்தே தவறா தறிந்திருந் ததனால்