பக்கம் எண் :

திரு அவதாரம்137

 

451.       பின்னுமே யுரைத்தார் சீடரை விளித்தே பெருமன தொடும்பரி வொடுமே
              என்பிதா வுடைய பேரரு ளையேதான் எவனொரு வன்பெறா விடிலோ
              என்னிட மவனே சேர்வதில் லெனவே யிதினிமித் தமேயுமக் குரைத்தேன்
              பின்னடைந் தனரே பின்செல மயங்கிச் சிசியரி லநேகம் பெயரே

452.       தன்னய மொடுமே சார்ந்திருந் தவரே பின்னடைந் தகன்றனர் தளர்ந்தே
              நன்னய மொடுமே சொல்லினர் தமது நண்பராம் பன்னிரு வருக்கும்
              என்னைவிட் டகன்றே பிரிந்துமே யெவணும் ஏகவே மனமா யினிரோ
              என்றுமுன் னுரைப்போன் பீற்றராஞ் சிமியோன் ஏகுவோம் எவரிடம் யாங்கள்.

453.       எங்களாண் டவரே எவ்விடஞ் செலுவோம் ஏகுவோ மெவரிட மிதுநாள்
              மங்கியே போகா சீவவார்த் தைகளே மாறா துமதிட முளதே
              துங்கனா மகத்வ சீவனுள் ளவராம் தெய்வசு தனேநீ ரெனவே
              பங்கமற் றதுவாம் விசுவச முளர்யாம் பார்த்தறி வேமெனப் பகர்ந்தான்.

454.       உங்களைத் தெரிந்து கொண்டது மிலையோ உவப்பொடு பன்னிரு பெயரே
              உங்களுக் குளுமே நிற்கிறா னொருவன் அவன்பிசா சானவன் என்றார்
              பங்கமுற் றவனாம் காரியோத் தவனே பன்னிரு பேர்க்குளே யொருவன்
              அங்கவன் தமையே காட்டியே கொடுப்பான் எனஅறிந் திருந்ததா லுரைத்தார்.

62. பாரம்பரியம், கைகழுவாமை, மத். 15 : 1 - 20; மாற். 7 : 1 - 23.

வேறு 

455.       திருப்பதி சாலேம் நின்றே திருக்குரு பரனை நாடி
              பரிசயர் பாரர் வந்தார் பரிந்துவந் திருந்தா ரங்கே
              திருக்குரு சீடர்க்குள்ளே சிலர்கரங் கழுவா தேதாம்
              விருப்பொடு முண்டல் கண்டார் விகற்பமாய் நினைத்தா ரன்றோ.