பக்கம் எண் :

138

 

456.       குழுமிய சுருதி யாளர் கொடும்பரி சயர்கள் கூடி
              பழுதிலாக் குருவைப் பார்த்தே பரபரப் பொடுகேட் டாரே
              கழுவாக் கரங்க ளாலே களிப்பொடு புசித்துஞ் சீடர்
              முழுவதுங் கடப்ப தேனோ முதுபரம் பரையாய்த் தானே.

457.       பரிசயக் கொள்கைக் காரர் பரம்பரை நியாயங் கொண்டே
              கரங்களைப் பல்த ரந்தான் கழுவா தேயுண் ணாரே
              ஒருதரம் நீரா டியுமே ஒருதரங் கடைபோய் வந்தால்
              திரும்பவும் குளித்துத் தாமே செய்முனே புசியா ரன்றோ.

458.       அப்படித் தானே செம்பு அந்தமுள் சிறிதாங் கிண்ணம்
              செப்புக் குடங்கள் யாவுஞ் சீர்மிகக் கழுவிக் கொள்வார்
              அப்படி வேறே ஆச்சா ரங்களுங் கைக்கொள் வாரே
              தப்பித மேதும் மீதில் தப்பிநே ராதே காப்பார்.

459.       அவர்களுக் கோருத் தாரம் அருட்பரன் சொன்னா ரீதோ
              இவர்களோ தம்வா யாலே யெனதிடஞ் சேர்கின் றாரே
              இவர்களோ அதரத் தாலே யெனைக் கனஞ் செய்கின் றாரே
              இவருட இதய மோதான் அகன்றதே என்னை விட்டே.

460.       அற்பமா மனுடர் தம்மால் ஆனகற் பனைகள் யாவும்
              பொற்புறு முபதே சம்மாய்ப் போதனை புகட்டு கின்றார்
              அற்பமு முதவா தேவீண் ஆராதனைசெய் கின்றார்
              நற்புக ழில்லா வண்ணம் நன்றுசெப் பினனே உமக்கு.

461.       பொற்பிலா வஞ்சர் நீர்தாம் பொருந்துமே யுமக்கிவ் வாக்கே
              பொற்புறு பரன்பிர மாணம் அகற்றினீர் பூரண மாயே
              அற்பமாம் பரம்ப ரைதான் அரிதாய்க் கைகொள் கின்றீர்
              அற்பமோ பெரிதே யாக்கி பெரியதோ அழித்தீ ரன்றோ.

462.       செம்புகள் சிறுகிண் ணங்கள் சிறப்புற கழுவு கின்றீர்
              அம்புறச் சடங்க னேகம் அனுசரிக் கின்றீர் நன்றாய்
              வம்புறு பரம்ப ரையே வகையொடு நிறைவேற் றற்காய்
              விண்பரன் பிரமா ணங்கள் வியர்த்தமாக் கல்நன் றாமோ?