பக்கம் எண் :

திரு அவதாரம்139

 

463.       உன்பிதா மாதா தம்மை உவப்பொடு கனஞ்செய் வாயே
              உன்பிதா மாதா தம்மைத் தவறிநிந் தனைசெய் யாதே
              தன்பிதா மாதா தம்மைத் தவறிநிந் தனைசெய் வோனே
              வன்கொலை ஞனாவா னென்றே வகையொடு வகுத்தான் மோசே.

464.       இந்தவோர் நியதியை யேநீர் யெளிதினில் மாற்றிப் போட்டீர்
              தந்தை தாயை நோக்கிக் கூறுவோர் பார்த்தே யோவான்
              இந்திதோ உனக்குச் செய்யும் உதவியே யேதும் உண்டோ
              அந்ததோ கொடுக்கின் றேனே யதையொரு கொர்பா னாக.

465.       என்றவன் சொல்லிப் போந்தால் எளிதினில் முடிந்தே போச்சே
              என்றுமே கடனா மீதை இவன்செய அவத்யம் இல்லை
              என்றுநீர் போதித் திந்த இறைவனின் பிரமா ணங்கள்
              பொன்றியே போகப் பார்க்கும் புனிதமற் றவரே நீவிர்.

466.       இத்துடன் முடிந்தே போச்சோ யின்னுமே யிவையே போன்ற
              சத்திலா விடயங் கள்தாம் சத்துள தெனச்செய் கின்றீர்
              பித்தரே பிதற்று கின்றீர் பேதையர் மயங்கத் தானே
              எத்தனை கேடே நீரே ஆவலா யியற்று கின்றீர்.

467.       மன்னவ னிவையே சொல்லி அவன்மனு மக்களை நோக்கி
              என்னிட மணுகிக் கேட்பீர் இனிதொடு எந்தன் வாக்கை
              உன்னியே யுமதுள் ளத்தில் உணர்ந்துமே கொளுமெல் லோரும்
              மன்னுமென் வசனத் தைத்தான் மகிழ்வொடே செவிகொள் வீரே.

468.       புறத்திருந் தொருவற் குள்ளே போகிற தேதன் றாலும்
              திறமொடு மவனைத் தானே தீட்டுமே செய்யா துண்மை
              புலப்படு பவையோ அன்றோன் புல்லிய இதயம் நின்றே
              திறமொடு மவனை யேதான் தீட்டுமே செய்யும் சத்யம்.

469.       கேட்கவே காதுள் ளோனே கேட்டிதே நிலையா முண்மை
              சேட்டமாய் வைத்தே காப்பாய் சேமமே யடைவாய் என்றார்
              கேட்டவ ராம்பர் சேயர் கேடுதா மடைதற் காயே
              வாட்டமுற் றேயா னாரே நட்டமே யிடறித் தம்முள்.