பக்கம் எண் :

திரு அவதாரம்141

 

477.       எல்லரிற் பெரியோ னென்னும் இழிகுணப் பெருமை யோடே
              பொல்லாத மதிகேட் டோடே புறம்வரும் திருட்டுச் சாட்சி
              பொல்லவை யிவையெல் லாமே புறப்படு மிதயம் நின்றே
              நல்லனாம் மனுடன் தன்னை நலங்கெடத் தீட்டே செய்யும்.

478.       இவ்வுப தேசஞ் செய்தே யேகினர் யேசு நாதர்
              அவ்வொரு வூரை நீங்கி அவரதே நாடே தாண்டி
              செவ்விய துரைக ளாகுந் தீருசீ தோனா டேக.
              நவ்விய சிசியர் தாமும் நாதனின் பின்சென் றாரே.

63. சீரோ பெனிக்கே நாட்டுப் பெண்.
மத். 15 : 21 - 28; மாற் 7 : 24 - 30.

479.       அங்கொரு வூரே சேர்ந்தார் அவணொரு வீட்டுள் சென்றார்
              தங்கிய அந்த வீட்டி லமர்ந்தச மாச்சா ரந்தான்
              அங்குளோ ரறிய வண்ணம் இருக்கவே யாசித் தாலும்
              மங்கா வொளி யானோர் மறைந்திருக் கக்கூ டாதே.

480.       ஊரிலே யுள்ளேர் மாதே துன்படைந் தவளுள் ளத்தில்
              சீரிலா வசுத்த ஆவி கொண்டவோர் தெரிவை மாதா
              சீரபெ னிக்கே நாட்டாள் தீண்டாக் கானான் மாதே
              சீரருள் நாதன் வந்த செய்திய றிந்தே வந்தாள்.

481.       பிணிக்கப் பட்டாள் தன்பெண் பீடை நீக்கிக் கொள்ள
              பணிவொடும் வீட்டுள் வந்தாள் பாதமே பணிந்தே வீழ்ந்தாள்
              துணிவொடுங் கூவி னாளே தூயதன் விசுவா சத்தால்
              பிணிகளே தீர்ப்போய் வல்லோய் பேரருள் ஆண்டாய் நீவிர்.

482.       தாவிதின் மைந்தா நீவிர் தயவுகொண் டிரங்கும் ஐயே
              பாவியென் மகள்பே யாலே படுந்துயர் சகிக்க வொண்ணா
              மேவியே கிருபை கூர்ந்தே விடுதலை செயுமென் றாளே
              பாவியர்க் கிரங்கும் நாதன் பதிற்சொலா மவுனங் கொண்டார்.