பக்கம் எண் :

திரு அவதாரம்145

 

504.       அத்தனிவ் வார்த்தை சொல்ல அஞ்சினர் சீடர் தாமே
              இத்தனை பேரே ராளம் எவ்வள வப்பம் வேண்டும்
              அத்துவா னக்கா டீதில் அவ்வள வப்பம் எங்கோ
              அத்தனே யிந்தக் காரியம் ஆகுமோ எம்மால் என்றார்.

505.       அத்தனோ பார்த்தன் னோரை யருளொடு கேட்டா ரீதே
              எத்தனை யப்பம் உண்டோ உமதிடஞ் சொல்வீர் என்றார்
              சித்தமே யேழே யப்பம் சிலசிறு மீனும் என்றார்
              அத்தனின் பாதத் தண்டை யவைகளை வைத்தார் சீடர்.

506.       அப்பனோ எல்லோ ரையுங் பந்திய மர்த்தச் சொல்லி
              அப்பமே யேந்திக் கையில் ஆசிசெய் தேய வற்றை
              அப்பனைத் தோத்ரஞ் செய்தே யவைகளைப் பிட்டீய்ந் தாரே
              அப்படி மீன்கள் யாவும் ஆசியே செய்தீந் தாரே.

507.       சீடரே பெற்றே யீவை சீரொடும் பங்கிட் டாரே
              ஆடவர் பெண்டீர் பாலர் யாவருந் திர்ப்தி யானர்
              ஆடவர் எண்ணம் மாத்ரம் ஆயிரம் நான்கா யிற்றே
              சேடமாந் துண்டெல் லாமே சேர்த்தனர் கூடை யேழில்.

508.       திருப்திய டைந்தோ ரான தெகபொலி திசையோ ரைத்தாம்
              திரும்பியே யூர்கட் கேக திருக்குரு யனுப்பிப் பின்னர்
              இருவறு சீட ரோடே யிவருமே கடலே தாண்டி
              மறுகரை தல்ம னூதா மக்தலா திசையே வந்தார்.

66. அடையாளந் தேடல்.மத். 16 : 1 - 4; மாற். 8 : 11 - 13.

509.       அருளுரு குருவா னோரக் கரையினிற் சேர்ந்த போதே
              திருக்குறும் மனதுள் ளோரே சதுபரி சேயர் சேர்ந்தே
              அருட்குரு பரனைச் சோதித் தவரொடு தர்க்கஞ் செய்தார்
              தருமோ ரடை யாளந்தான் தடம்விரி வானில் நின்றே.

510.       செவ்விய வானங் காலை வெளியெனச் செப்பு வீரே
              செவ்வை மந்தரம் ஆயின் சிவந்தநற் காலை தன்னில்
              எவ்விதங் காற்றும் மாரி யெழும்புமே யென்றே சொல்வீர்
              இவ்வித மாயே நீவிர் இயம்பிநி தானிக் கின்றீர்.