பக்கம் எண் :

146

 

511.       வானின் தோற்றம் யாவும் வகையொடும் ஆய்ந்தே சொல்ல
              ஞானம டைந்தீ ரன்றோ நலமிலா மாய்மா லாரே
              ஏனிதே காலங் காட்டும் இயல்படை யாளத் தைத்தான்
              தானுநி தானித் தற்கே தகுந்தஞா னமேயற் றீரோ.

512.       பெருமகன் சொன்னா ரின்னும் ஒருபெரு மூச்சும் விட்டே
              அருவருப் பாமோர் சாதி ஓர் அடை யாளந் தேடி
              அருளிலாப் பொல்லா சாதி எதற்கது கேட்க வேண்டும்
              தருவதில் வானம் நின்றே தகுமடை யாள மேதும்.

513.       ஒருவனாந் தரிசி யோனா ஓரடை யாளம் அல்லால்
              அருளுவ திலையே வேறே யடையா ளம்மின் னோர்க்கே
              திருக்குரு இதனைச் சொல்லி படவினிற் சீட ரோடே
              திரும்பினார் மறுக ரைக்கே திபேரியாக் கடலைத் தாண்டி.

67. புளித்தமா உரையாடல். மத். 16 : 5 - 12; மாற். 8 : 14 - 21; லூக். 12 : 1.

514.       அப்பமே கொண்டே போக அவர்மறந் தேபோ னாரே
              அப்பமோ படவி லொன்றே யிருந்ததே யன்னோ ரண்டை
              அப்பனோ சீடரொடே மறுகரை வந்தே யப்போ
              செப்பினார் சீடர் கட்கே தெளிவொடெச் சரிப்பே யொன்றே.

515.       புனிதமில் பரிசே யாரின் புளித்ததாம் மாவைப் பற்றி
              நனிகெடு சதுசே யாரின் நரியெனு மேரோ தேயின்
              புனிதமே சிறீது மில்லாப் புளித்ததாம் மாவைப் பற்றி
              இனியிப் பொழுது மென்றும் இடுமெச் சரிக்கை யாயே.

516.       அப்பமே யெடுத்துப் போக அசதியாய்ப் போன தாலே
              இப்படிச் சொல்கின் றாரோ எனநினைந் தார்தம் முள்ளே
              அப்படி யேயோ சிக்க அமலன றிந்தே யீதை
              இப்படி நீவி ரெண்ண நியாயமே உண்டே ஏதும்.

517.       அற்பவிசு வாசி காள்நீர் அப்பமில் லாத தாலே
              இப்படி யுங்கட் குள்ளே எண்ணமே கொள்கின் றீரோ.
              எப்படி யின்னும் நீவிர் உய்த்துணர் வின்றே போனீர்
              எப்படி முன்செய் தேனென் றுய்த்திணர் வீரிப் போதே.