பக்கம் எண் :

திரு அவதாரம்147

 

518.       இன்னுமும் மிதயத் தில்நீர் கடினமா னீரோ கற்போல்
              இன்னுமே யிருந்துங் கண்கள் இருக்கிறீ ரோகா ணாதே
              இன்னுமே யிருந்துங் காதே யிருக்கிறீ ரோகே ளாதே
              என்னுட கிரியை யாவும் மறந்திருக் கின்றீ ரோநீர்.

519.       அப்பமே யைந்தா லைந்தே யாயிரம் போசித் தோமே
              அப்பத் துணிக்கை கள்நீ ரள்ளின கூடை கள்தான்
              செப்புவீ ரெனக்கே நீரே எத்தனை யென்றே சீராய்
              அப்பனே யள்ளி னோமே ஆறிரு கூடை கள்தான்.

520.       அப்பமே யேழால் நான்கே ஆயிரம் போசித் தோமே
              அப்பத் துணிக்கை கள்நீ ரள்ளின கூடை கள்தான்
              செப்புவீ ரெனக்கே நீரே எத்தனை யென்றே சீராய்
              அப்பனே யேழே கூடை யள்ளினோம் என்றே சொன்னார்.

521.       இப்படி யிருந்தும் நீவிர் எதுவிதம் உணர்வற் றீரோ
              அப்பமாம் புளித்த மாவைக் குறித்ததே யலவே யென்றே
              அப்பப் புளித்த மாவைக் குறித்ததே யிலையன் னோரின்
              தப்பித வுபதே சத்தின் தவறென அறிந்தே கொண்டார்.

68. பெத்சாயிதாக் குருடன். மாற். 8 : 22 - 26.

522.       திருக்குரு அவணே நின்றே அருகுபெத் சாய்தா சேர்ந்தார்
              குருடனா மொருநிர்ப் பந்தனை அவரிடங் கொண்டே வந்தார்
              திருக்குரு அருளே கொண்டே கையாற் றொடவே தாமே
              பரிந்துமே வேண்டிக் கொண்டார் பரிவொடுங் கொண்டே வந்தோர்.

523.       குருடனின் கையே கொண்டார் கொண்டுபோ யூர்க்கப் பாலே
              குருவுமிழ்ந் தாரே யந்தக் குருடனின் நயனங் கள்மேல்
              அருட்டிரு கரங்க ணீட்டி அருளொடு மவனைத் தொட்டே
              பொருளெதுங் காண்கின் றாயோ புகல்வாய் என்றே கேட்டார்.

524.       கண்களே யேறெ டுத்தான் மங்கலாய்க் காண்கின் றேனே
              நன்னய மாய்ந டக்கும் மாந்தரை மரம்போல் என்றான்
              கண்களின் மேற்கை வைத்தே ஏறிட் டேபார் என்றார்
              கண்களே திறக்கப் பட்டே கண்டனன் எதையும் நன்றாய்.