148. முன்னாள் முன்னவன் தெரிந்தபன் னிருவரு மலர்தே இந்நாட் டேர்ந்தனர் எழுபது சிசியராம் பிறரே முன்னா லனுப்பினர் இருவரி ருவராய் முதல்வன் பின்னாற் றாஞ்செலும் பதிகளும் பிரதே சமுமே. 149. அருளார் குருபரன் அவர்களை யனுப்பிய பொழுதில் அறுப்பு மிகுதியே யறுப்பவர் மிகச்சிலர் தமது அறுப்புக் கவசிய மனுடரை யனுப்பவே தயவாய் அறுப்புக் கதிபனை அவாவொடு வருந்திவேண் டுவீரே. 150. நாட்ட மாயுமை நாடெலா மனுப்புகின் றனன்யான் ஆட்டுக் குட்டியோ நாய்நடு வனுப்புகின் றதேபோல் தாட்டீ கட்மொடு செல்லுவீர் தடையெது மிலையே நாட்டுட் போம்பொழு தேதுமே யெடுக்கவே வேண்டாம். 151. பணப்பை யோபொருட் பைகளோ மிதியடி களுமோ இனமா யேயெதுங் கொண்டுநீர் செலஅவ சியமில் வினவ வேசெயீர் வீணதே எவரையும் வழியில் கடிணப்போ தாயினுந் தாமதஞ் செயீர்வழி யினிலே. 152. எந்த வீட்டினுட் செல்லவே யினிதொடு சணமே முந்திக் கூறுவீர் வாழ்த்துதல் முகமலர்ந் தினிதாய் இந்த வீட்டினுக் காகுக நிமதியே யினிதாய் அந்த வீடுபாத் திரமெனி லமருமந் நிமதி. 153. அங்கி லரனெனில் ஆருமே நிமதிபாத் திரனே அங்கே தங்கா தகன்றது திரும்புமும் மிடமே எங்குட் செல்லுவீ ரவ்வகந் தரித்தே யிருப்பீர் அங்க வர்தரு முணவெது மருந்துவீர் நலமாய் 154. வேலை யாளெவன் வேலைசெய் கூலிபாத் திரனே மாலை நேரமே வாங்குவான் கூலியே சரியாய் வேலை யற்றராய் வீடுவீ டாகவே திரியீர் ஆலோ சனைசெயா தந்தவோர் விட்டிலே தரிப்பீர். |