பக்கம் எண் :

திரு அவதாரம்263

 

85.        தற்பரன் திருவா லாயத்தினிலே தந்திரு வினைகளிற் றளர்விலாதே
              பொற்புறு பரநலம் பலபெருகும் புண்யபோ தகமே புகன்றனரே
              அப்பகல் முழுவது மங்குளராம் யாவரும் நன்மை யடைந்தனரே
              பிற்பகல் கடந்துபின் னிரவுவர பெத்தனிப் பதிசேர்ந் தமர்ந்தனரே.

செவ்வாய்
136. (1) அத்தியின் போதனை.
மத். 21 : 20 - 22; மாற். 11 : 20 - 26.

86.        பின்னா ளெழுந்மே விடிந்தவுடன் பயணமா யினரே பேரருளார்
              முன்னாட் சபித்தவத் தருவேதான் முழுவதும் பட்டிருப் பதையறிந்தார்
              என்னோ இதுபே ரதிசெயமே எனவியந் தார்சிசி யரேசீமோன்
              மன்னா சபித்தீர் மரமிதுவே முழுவதும் பட்டதே யெனவுரைத்தான்.

87.        விசுவச முடையவர்க் கிதுபெரிதோ வேறெதும் பெருஞ்செய லியற்றுவரே
              விசுவச முளராய்ச் சொலும்பொழுதில் வீழுமிம் மலையே கடலினுளே
              விசுவச முளராய் நீர்ச்செபித்தால் வேண்டிய வனைத்து பெறுவீரே
              விசுவசுப் பீரடை வோமெனவே வேண்டுதல் செயும்போ தெப்பொழுதும்

88.        மன்னிப் பருளுமா அரியகுணம் மாபெரு நயங்கள் பயக்குமன்றோ
              மன்னிப் பருளிச் செயுஞ்செபமும் மாபெரு வலமை யுமேயுளதே
              மன்னிப் பருள்வீ ருமக்கதேபோல் மன்னிப் பருள்வார் பரமபிதா
              மன்னிக் கவுமே மனமிலையோ மன்னிப் பருளார் பிதாவுமக்கே.

136. (2) அதிகாரம் எங்கிருந்தது.
மத். 21 : 23 - 27; மாற். 11 : 27 - 33; லூக். 20 : 1 - 8.

89.        செவ்வையாய்ப் புகன்றுப தேசமிதை யடைந்தனர் யெருசலே மாலயமே
              அவ்விட மடைந்தனர் பாரகரும் பெரியவர்ச் சகரும் மூப்பருமே
              எவ்வித காரத் தாலிவையே யியற்றுகின் றீரே யவ்விதமே
              இவ்வதி காரமு மக்களித்தோ ரெவரென விளம்பும் என்றனரே.

90.        தீட்சையே கொடுத்தான் ஸ்நானகனே தீரனா முனிவ னருளனுமே
              தீட்சையே கொடுக்கவே யதிகாரம் ஆனதோ கடவுளால் மனுடனாலோ
              சாட்சியா யுரைப்பீ ருத்தரவே தப்பிலா மறுமொழி மொழிவீரே
              தாட்சியில் லாப்பதி லீய்குவேனே யும்வினா வுனுக்கே தக்கவிடை.