பக்கம் எண் :

264

 

91.        விண்பர னாலிதே யானதெனில் விசுவசி யாததேன் அவனென்பார்
              மண்ணவ ராலிதே யானதெனில் வதைப்பரே கல்லெறி வார்சனமே
              திண்ணமா யாமறியே மென்றார் திடமொடு செப்பினர் பெரும்புகழாய்
              அண்ணலா ரவர்க்கொரு மறுமொழியாய் அறிவியெம் யாமுமக் கென்றனரே.

136 (3)கீழ்ப்படிதலுள்ள குமாரன்.மத். 21 : 28 - 32.
வேறு 

92.        குருபரனாஞ் யேசிவர்க்கு ரைத்தனரே கூறுவீரே நேர்மையாயே தோன்றுவதை
              ஒருபெரியோ னுக்கிருந்தா ரீர்குமாரர் ஒருமகனோ சட்டெனவே பேசுபவன்
              ஒருமகனோ மாவிதமாய்ப் பேசுபவன்பேச் சொன்றேதான் வேறுவித மேநடக்கை
              இருவரையுந் தனித்தனியாய்ப் போகஏவ தன்திராட்சைத்தோட்டத்தினில் வேலைசெய்ய.

93.        ஐயாமாட் மேனென்றான் மூத்தமகன் அப்புமோ போயினனே மாறிமனம்
              ஐயாபோ வேனென்றான் சின்னமகன் இப்புறமோ செய்யவில்லை சொன்னபடி
              மெய்யாயே சொல்லுவீரே யாரிவர்க்குள் மெய்ப்பொடுமே தந்தையுரை செய்தவனே
              பொய்யாது ரைத்தனரே யன்னவரே பூரணமாய்ச் செய்தவனோ மூத்தமகன்.

94.        ஆயமேகொள் வோர்களுமே வேசிகளும் அற்பரென அவமதிக்கப் பட்டவரும்
              நேயமொடே செல்லுகின்றா ரும்முனாலே நித்தியராங் கடவுளது ராச்சியத்துள்
              ஞாயமிகு மார்க்கமாக வந்திருந்தும் நம்பவில்லை யருளனைநீ ரேற்கவில்லை
              ஆயமேகொள் வோர்களுமே வேசிகளும் விசுவசித்தே யேற்றனரே யன்னவனை

95.        வந்தழைத்தான் பாவியரை யேயருளன் மனந்திரும்பி வான்ராச்சியஞ் சேர்ந்துயவே
              வந்தனரே பாவியரே ராச்சியத்துள் மனந்திரும்பி தீயவழி விட்டகன்றே
              வந்தவர்கள் சேர்ந்ததைநீர் கண்டிருந்தும் வகையொடுமே நல்வழியே கேட்டிருந்தும்
             விந்தைதா னும்மனமோ மாறவில்லை விசுவசமு மற்றவரா யேயிருந்தீர்.