பக்கம் எண் :

திரு அவதாரம்265

 

136.(4) துரோகிகளாந் தோட்டக்காரர்.
மத். 21 : 33 - 46; மாற். 12 : 1 - 12; லூக். 20 : 9 - 19.

96.        இன்னுமுமக் கோருவமை சொல்லுகிறேன் இதமொடுமே கேட்டதையு ணர்ந்துகொளும்
              பன்னருகா லுண்டொருவன் வீட்டெசமான் முதலுளோன்கா ணிபூமியும்ப டைத்தோனே
              நன்னயமா யுள்ளநிலந் தேர்ந்தெடுத்தான் நலமிகுந்தி ராட்சைவன மாக்குதற்கே
              இந்நிலத்து நாற்புறமும் வேரிகொண்டே இதனையர ணுள்ளதொரு தோட்டமாயே.

97.        இதனுளேயே யாலைரசத் தொட்டியமைத் தெழும்பியவோர் கோபுரமுங் கட்டினனே
              இதனையேவே ளாளரான பண்ணையாட்கட் கேற்றவோர்தொ கைக்கடைதான்
                                                                                                                                                                                       குத்தகையாய்
              இதமொடுமே காலத்திற் குத்தகையே யெளிதிலிவ ரீய்வரென நம்பியமே
              இதரபுறத் தேசத்திற் கேகியவன் எதுகவலு மின்றவணே வாழ்ந்திருந்தான்.

98.        கனிகாலமே வந்துறவ னுப்பினனே கனியிலேபா கம்பெறவோ ரூழியனை
              கனியிலேபா கங்கொடுக்க வேமனமிற் காதகர டித்தவனை யோட்டினரே
              கனிபெறவெவ் வேறுபல ரங்குவர கல்லெறிந்த டித்துமேகொன் றாரவரை
              கனிதருவார் தன்மகனைக் காணிலவர் நம்பியேய னுப்பினன்தன் னோர்மகனை.

99.        இட்டமக னென்றவனே யோசியாதே யேகசுத னாமவனை யேயனுப்ப
              துட்டராமத் துரோகிகளோ பண்ணையாட்கள் தூரமேசு தந்தரனைக் கண்டவுடன்
              இட்டமாஞ்சு தந்தரனே யிம்மகனே மாண்டுபோயி னெம்மதேசு தந்தரமே
              இட்டமாமிம் மைந்தனையாங் கொன்றிவனின் சொத்தையேயாம் பற்றுவோமே
                                                                                                                                                                                       யென்றுரைத்தே.

100.       அப்படிப்பி டித்தவனைக் கைப்பிடியாய் அம்மகனைத் தாமடித்தே கொன்றனரே
              அப்படியத் தோட்டத்திற் கப்புறத்தி லம்மகன்பி ரேதத்தை யேயெறிந்தார்
              இப்படியித் தோசிகளே செய்திடினுஞ் சொத்துமேயி வர்க்களுக்கே சேர்ந்துபோமோ
              எப்படிந டக்குமெச மான்வருநாள் என்னசெய்வா னென்றுரைப்பீர் என்றனரே.