பக்கம் எண் :

266

 

101.       இட்டமேபோ லேநடத்து வானவரை தண்டனைசெய் வானிரக்கங் காட்டாதே துட்டராமத் தோசியரைப் பண்ணையார்க் குரூரமாகக்கொன்றழிப்பார் ஆலாரோ இட்டமாயே தட்டிலாதே காலத்திற் பாகத்தை யிவற்குக்கொடுப்பவர்க்கே
திட்டமாய டைப்பானே தோட்டத்தை யென்றவர்கள்செப்பினாரே மாறுமொழி.

102.       வேலையிலா காதெனவே கட்டுவோரால் வெளியிலெறியுண்டதான கல்லதுவே              மூலையின்த லைக்கல்லா யாயினதே முதல்வரான கர்த்தராலே யாயினதே
சாலஅதே நம்முடைய கண்களுக்குஞ் சகலருக்கு மாச்சரிய மாயினதென்
னோலமாயே வேதமுமே கூறுவதை யொருபொழுதும் நீர்படிக்க விலையாமோ.

103.       எடுபடுமே தெய்வமுட ராச்சியமே யிணக்கமிலா சாரியும்மிடத்திருந்தே
              கொடுபடுமே யேற்றதான நற்கனிகள் கொடுப்பவராம் நற்குணமுள் சாதியிடம்
              தடுக்கியுமே யிக்கன்மேல் வீழ்வனெவன் தவிடுபொடி யாய்நொறுங்கிப் போய்விடுவான்
              தடுமெனவெ வன்தலைமேல் வீழயிதே திண்ணமேந சுங்கியுமே போயொழிவான்.

104.       அவர்சொலிய வுவமைகளைக் கேட்டிருந்தோர் அருளிலாப்பே ரர்ச்சகரும் பரிசயரும்
              அவர்சொலியே வந்தவுப மானமிவை யனைத்துமேதம் மைக்குறித்த தென்றறிந்தே
              அவரையேபி டிக்கவகை தேடினுமே யவையனைத்துங் கேட்டிருந்த மற்றசனம்
              அவரொருதீர்க் கத்தரிசி யென்றெணவே யவர்களுக்கே யஞ்சியேய கன்றனரே.

136.(5) கலியாண விருந்து.மத். 22 : 1 - 14.

105.       இன்னுமுப மானத்தாற் பேசினரே யிணையிலாத சற்குருவாம் யேசுபரன்
              உன்னதவான் ராச்சியம்நி கர்த்ததொரு அரசனுட மைந்தனின்கல் யாணத்தை
              மன்னவன்தன் மங்களவி ருந்தினுக்கே வரவழைத்தான் பல்பெயராம் விருந்தினரை
              அன்னவர்கல் யாணத்துக் கேகவில்லை யவமிதித்தே ராசனைய சடைசெயவே.