106. அனுப்பினன ழைத்துவர வூழியரை யழைத்திருந்த விருந்தினரே யானவரை அனுப்பினரே யூழியரை யேதிருப்பி யவர்களேவந் தாரிலைவி ருந்தருந்த அனுப்பினனே வேறுசில வூழியரை யருமையாய் அழைத்தனன்ரண் டாந்தரமும் அனுப்பியதன் னூழியரின் மூலமாயே யருமையா னவார்த்தை களைச்சொலவே. 107. விருந்தனைத்து மாயத்தமே யாயினதே விருந்தருந்த வேறுதடை யாதுமில்லை எருதுகள்கொ ழுத்தவையாஞ் செந்துகளே யினிதுறவே பாகமாயிற் றேயனைத்தும் வருகநீவிர் என்னுடம ணத்தினுக்கே வருகநீர ருந்திநல மாமனைத்தும் திருப்தியாய னூபவித்தே மாமகிழ்வாய்த் திரும்புவீரே யென்றுசொல வேயனுப்ப. 108. குறுமதியா ரேயழைக்கப் பட்டவரோ குணமிகும ழைப்பையே புறக்கணத்தார் ஒருவனின்பின் னாலோருவன் போக்குரைத்தே ஒருவனும்வ ராதுமேதன் பணிசென்றான். ஒருவனோஎன் நன்செய்ப்பார்க் காவிடிலோ ஒழிந்துபோகு மென்பயிரென் றேகினனே ஒருவனோயான் வர்த்தகம்பார்க் காவிடிலோ ஒழிந்துபோகு மென்றுசொலி யேகினனே. 109. பாதகத்து ரோகிளர் மற்றவரோ பழக்குமேயஞ் சாதவராம் மாகொடியோர் ஏதெனுமே குற்றமிலா வூழியரை எவனெனினுந் தப்பாதே கொன்றனரே பாதகரின் மேற்சினந்து ராஐனுமே சேவகர்ப டையனுப்பித் தோசிகள்மேல் பாதகரைச் சங்கரித்தே சுட்டெரித்தான் அவர்களுட பட்டணத்தைப் பட்பமாயே. 110. இராயனேதன் னூழியரைத் தானழைத்தே ரம்மியமாய்க் கட்டளையிட் டானவர்க்கே ஆயத்தமா னதேவிருந்துமே அதற்கழைக்கப் பட்டவர பாத்திரரே யானாரே போயிந்நகர் வீதிகளில் சந்துகளில் புகுந்தவணீர் கண்டவரை யேயழைப்பீர் போயவரே யப்படியே வல்லவரை பொல்லவரெல் லோரையும ழைத்தனரே. |