111. கலியாண வுடைகளேய ணிந்தவராய் வந்துநிறைந் தார்விருந்து சாலையிலே கலியாண விருந்தினரைப் பார்ப்பதற்காய்ச் சாலையினுட் செல்லகன ராயனுமே கலியாண வுடையெதுமி லாதொருவன் கண்ணியமாய் வந்தவரோ டங்கிருந்த கலியாண வுடைடையணி யாததேனோ காரணஞ்சொல் லென்றனனே ராயனுமே. 112. அரசனுரைக் கேற்றபதிற் சொல்லவொண்ணா தவன்மவுன மாயெதும்பே சாதிருந்தால் அரசனோகற் பித்தனன்தன் னூழியர்க்கே பிடித்தவன்க ரம்பதங்கள் கட்டியுமே புறம்பாமி ருட்டினிலே போட்டுவிடும் புலம்பலங்கே பற்கடிப்புமுள் ளதென்றானே திரமொடும ழைப்புமேபெற் றோர்பலபேர் தெரிந்துகொள்ளப் பட்டவரோ கொஞ்சமேன்றார். 137. பல கேள்விகள். 113. பலவிதமாங் கேள்விகளே கேட்டதினால் பாங்கொடுமே கேள்விதின மென்னுமிந்நாள் பல்வகுப்பார் பல்விதமாங் கேள்விகளாற் பலவிதமாய்ச் சோதனைசெய் தார்பரனை பல்விதமாய்ச் சோதனைசெய் கேள்விகளாற் றாம்பதறா தேபதிலே சொல்லவீவர் பல்விதமாய்ச் சோதனைசெய் பல்வகுப்பார் தாம்பதறி யேதவறிப் போயினரே. 114. முதற்சொலுமோர் சாட்சிமுதற் கல்லெறிவான் முதல்வினாவை மூவகுப்பார் கேட்டனரே அதன்பின்னாற் சரிசயரே ரோதியரும் அடுத்தவொரு கேள்வியாற்சோ தித்தனரே அதன்பின்னாற் சாதுசேயர் சாத்திரியும் அடுத்தவிரு கேள்விகளாற் சோதித்தனர் முதல்வனவர்க் கேற்றவிடை யேயளித்தே முடிவிலொரு கேள்விகேட்ட டக்கினரே. |